அஹமதாபாத்தில் சொன்னதை செஞ்சுட்டேன்.. இப்போ தான் மகிழ்ச்சியா இருக்கு.. கமின்ஸ் ஆனந்த பேட்டி

Pat Cummins 2
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் தொடரை வென்ற ஆஸ்திரேலியா 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக சொந்த மண்ணில் தொடர்ந்து 10 போட்டியில் வென்று ரோகித் சர்மா தலைமையில் மிரட்டலாக செயல்பட்டு வந்த இந்தியாவை நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தி புதிய சாம்பியனாக சாதனை படைத்தது.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சுமாராக விளையாடி 241 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 54, ரோஹித் சர்மா 47, ராகுல் 66 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 134, லபுஸ்ஷேன் 58* ரன்கள் எடுத்து எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

சொன்னதை செய்த கமின்ஸ்:
அதனால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்வோம் என்று மிகப்பெரிய கனவுடன் காத்திருந்த 100 கோடி இந்திய ரசிகர்களின் நெஞ்சங்கள் சுக்கு நூறாக உடைந்தது என்றே சொல்லலாம். முன்னதாக சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று பட் கமின்ஸ் போட்டிக்கு முன்பாகவே தெரிவித்தார்.

எனவே இந்தியாவை சிறப்பாக செயல்பட்டு தோற்கடித்து இந்திய ரசிகர்களை சத்தமின்றி அமைதியாக இருக்க வைப்போம் என்று சவால் விடுத்திருந்த அவர் கடைசியில் அதை செயலிலும் செய்து காட்டி கோப்பையை பறித்தார். அந்த வகையில் அகமதாபாத் ரசிகர்களை ஃபைனலில் அமைதியாக இருக்க வைத்தது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கும் பட் கமின்ஸ் இது பற்றி போட்டியின் முடிவில் கலாய்க்கும் வகையில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நாங்கள் பந்து வீசிய இன்னிங்ஸில் இந்திய ரசிகர்கள் பெரும்பாலான நேரங்களில் அமைதியாக இருந்த போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சில நேரங்களில் அவர்கள் அதிகப்படியான சத்தத்தை வெளிப்படுத்தினார்கள். இந்திய அணிக்கு அவர்கள் கொடுக்கும் ஆதரவு அபாரமாக இருந்தது. ஒருவேளை இப்போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் இவ்வளவு ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடிய அனுபவத்தை எப்போதும் மறைந்திருக்க மாட்டோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அஷ்வினை குறைச்சு எடைப்போட்டு செஞ்ச அதே சின்ன தவறு.. இந்தியாவின் தோல்விக்கான பெரிய காரணம் இதோ

அந்த வகையில் லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்ட இந்தியா மீண்டும் நாக் அவுட் சுற்றில் முக்கிய நேரத்தில் சொதப்பி அதுவும் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து 10வது வருடமாக தோல்வியை சந்தித்துள்ள இந்திய அணியினர் எதிரணிகளிடம் கெத்தாக பேசும் வாய்ப்பை தங்களுக்கு கொடுக்காதது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் அவமானத்தையும் கொடுத்துள்ளது.

Advertisement