IND vs AUS : 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் பேட் கம்மின்ஸ் விலகல் – காரணம் என்ன தெரியுமா?

Pat-Cummins
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த வேளையில் 2 போட்டிகளிலும் படுதோல்வி சந்தித்த ஆஸ்திரேலியா அணியானது இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

IND vs AUS

- Advertisement -

ஏற்கனவே இந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் ஏகப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் காயம் காரணமாக எஞ்சியுள்ள டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து தொடர்ந்து விலகிய நிலையில் அந்த அணியின் கேப்டனான பேட் கம்ம்மின்ஸ்-சும் இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த சில மணி நேரத்திலேயே ஆஸ்திரேலியாவிற்கு பயணித்தார்.

மேலும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவர் ஆஸ்திரேலியா அணியுடன் இணைவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் இருந்து அதிகாரபூர்வமாக விலகியுள்ளார் என்று அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

Pat-Cummins

அதன்படி டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்ததும் தனது தனிப்பட்ட குடும்ப பிரச்சனைகள் காரணமாக ஆஸ்திரேலியா சென்ற பேட் கம்மின்ஸ் தற்போது தனது தாயின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதினால் தான் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இணைய முடியாது என்று பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்த சமயத்தில் நான் இந்தியா திரும்புவதை விட என்னுடைய குடும்பத்துடனும், என்னுடைய தாயுடனும் இருப்பது தான் சரி என்று இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். பேட் கம்மின்ஸ் எடுத்துள்ள இந்த முடிவிற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகமும் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இதையும் படிங்க : நீங்க போராடி தான் தோல்வியை சந்திச்சீங்க. சோ நோ ப்ராப்லம். நாங்க இருக்கோம் – ஆறுதல் கூறிய ஜெய் ஷா

மேலும் எனது முடிவிற்கு மதிப்பளித்து புரிந்து கொண்ட எனது அணி வீரர்களுக்கும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் அவர் நன்றி கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக அந்த அணியை சேர்ந்த அனுபவ வீரரான ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என்று தெரிகிறது.

Advertisement