நீங்க போராடி தான் தோல்வியை சந்திச்சீங்க. சோ நோ ப்ராப்லம். நாங்க இருக்கோம் – ஆறுதல் கூறிய ஜெய் ஷா

Jay-Shah
- Advertisement -

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை இந்திய ஆண்கள் அணி கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து மீண்டும் ஒருமுறை ஐசிசி தொடரை தவறவிட்டது. அதனை தொடர்ந்து ஏமாற்றம் அடைந்த இந்திய அணியானது தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியை நோக்கி பயணித்து வருகிறது.

இவ்வேளையில் தென் ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் எட்டாவது சீசனானது கோலாலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியி நேற்று கேப்டவுனில் நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி விளையாடியது.

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி இந்திய அணியானது ஒரு கட்டத்தில் வெற்றியை நோக்கி முன்னேறியது. அப்போது மகளிர் அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர் ரன் அவுட் ஆனதால் இறுதியில் நூலிழையில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை தவறவிட்டது.

இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே குவித்து ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இப்படி இந்திய மகளிர் அணியும் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும், கோப்பையையும் தவறவிட்டதால் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். ஆனாலும் இந்திய மகளிர் அணியின் இந்த சிறப்பான போராட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ செயலாளரான ஜெய் ஷா அவர்கள் மகளிர் அணியை ஆறுதல் அளிக்கும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடுமையாக போராடியே தோல்வியை சந்தித்துள்ளனர். களத்தில் எங்களது பெண்களின் உற்சாகத்திற்காக நாங்கள் பெருமைப்பட முடியாது.

இதையும் படிங்க : IND vs AUS : சொல்றதுக்கு ஒன்னுமில்ல ஆனா கடைசியா அதை செய்ங்க – தொடரை சமன் செய்ய ஆஸி அணிக்கு ஆலன் பார்டர் அட்வைஸ்

இருந்தாலும் ஒரு அணியாக தங்களால் முடிந்தவரை அனைத்தையும் அளித்து உண்மையாக போராடினார்கள். நீங்கள் உண்மையான போர் வீரர்கள் என்பதை சுட்டிக்காட்டி நாங்களும் உங்களுடன் நிற்கிறோம். “நீல நிற பெண்களே” என்று தனது ஆதரவினை அவர் ஆறுதலாக பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement