IND vs AUS : சொல்றதுக்கு ஒன்னுமில்ல ஆனா கடைசியா அதை செய்ங்க – தொடரை சமன் செய்ய ஆஸி அணிக்கு ஆலன் பார்டர் அட்வைஸ்

Steve Smith Allan Border
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டுள்ளது. அதனால் கடைசியாக 2014/15இல் அந்த கோப்பையை வென்றிருந்த ஆஸ்திரேலியா 2017, 2018/19, 2020/21, 2023* ஆகிய அடுத்தடுத்த 4 தொடர்களில் தொடர்ந்து தோற்ற முதல் அணியாக பரிதாப சாதனை படைத்துள்ளது. அத்துடன் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் வரலாற்றில் முதல் முறையாக சொந்த மண்ணில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்து 2004க்குப்பின் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற ஆஸ்திரேலியாவின் கனவு மீண்டும் உடைந்துள்ளது.

- Advertisement -

முன்னதாக ஸ்லெட்ஜிங் செய்து வெற்றி பெறுவதில் கில்லாடின ஆஸ்திரேலியா தொடர் துவங்குவதற்கு முன்பாகவே இந்தியா வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைத்துள்ளதாக குற்றம் சாட்டியது. ஆனால் வாயில் பேசியதை செயலில் காட்டத் தவறிய அந்த அணியை முதல் போட்டியில் முறையே 177, 91 ரன்களுக்கு சுருட்டி அதே பிட்ச்சில் 400 ரன்கள் அடித்த இந்தியா ஆஸ்திரேலியர்களின் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கி அபார வெற்றி பெற்றது. அதே போல் 2வது போட்டியிலும் 3வது நாளில் 2 மணி நேரத்தில் மடமடவென விக்கெட்டுகளை இழந்து 114 சுருண்டு படு தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா உலகின் நம்பர் உன் அணி என்பதற்கு எடுத்துக்காட்டாக செயல்படாமல் சொதப்பியது.

சொல்றதுக்கு ஒன்னுமில்ல:
அதை விட சுழலாமல் நேராக வரும் பந்துகளை கூட சரியாக எதிர்கொள்ள தேவையான டெக்னிக் தெரியாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடித்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அவுட்டானது அந்நாட்டு ரசிகர்களையே கடுப்பாக வைத்துள்ளது. அதனால் ஆரம்பத்தில் இந்தியாவை விமர்சித்த ஆஸ்திரேலியர்கள் தற்போது உண்மையை புரிந்து கொண்டு தங்களது அணி வீரர்களை விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் செய்தித்தாள்களில் வரும் விமர்சனங்களை தவிர்த்து விட்டு இத்தொடரை எப்படி சமன் செய்யலாம் என்பதை உட்கார்ந்து பேசி முன்னேறுவதை தவிர்த்து ஆஸ்திரேலிய அணிக்கு வழங்குவதற்கு தம்மிடம் வேறு எந்த ஆலோசனையும் இல்லை என்று ஆலன் பார்டர் கூறியுள்ளார்.

IND vs AUS Siraj SMith

குறிப்பாக அஷ்வின் – ஜடேஜா போன்ற தரமான சுழல் பந்து வீச்சாளர்களை உடனடியாக சிறப்பாக எதிர்கொள்ள வாயில் சொல்லி கற்றுக் கொள்ளும் அளவுக்கு எந்த ஆலோசனையும் இல்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அடுத்த சில நாட்களுக்கு அவர்கள் ரேடியோ கேட்பதையும் செய்தித்தாள்களை படிப்பதையும் நிறுத்த வேண்டும். ஏனெனில் தோல்வியை விட தாக்கத்தை ஏற்படுத்தும் சில கருத்துக்களை அவர்கள் சந்திக்கலாம். எனவே தற்போதைக்கு அவர்கள் ஒன்றாக அமர்ந்து தரமான சுழல் பந்து வீச்சை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை பற்றி விவாதிக்க வேண்டும்”

- Advertisement -

“அதற்கான அணி மீட்டிங்கை சொல்லாமலேயே அவர்கள் நடத்துவார்கள் என்பதையும் அறிவேன். குறிப்பாக சுழலுக்கு எதிராக சரியான அடிப்படையை நீங்கள் பின்பற்ற வேண்டும். ஆனால் அது க்ராஸ் பேட் டெக்னிக்காக இருக்கக் கூடாது. 2வது போட்டியின் முதல் இன்னிங்ஸில் உஸ்மான் கவாஜா நல்ல ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை அடித்தார். ஆனால் பிட்ச்சில் பவுன்ஸ் மிகவும் குறைவாக இருக்கும் போது அது மிகவும் ஆபத்தானது. எனவே அதற்கேற்றார் போல் உங்களது டெக்னிக்கை மாற்றுவது தான் டெஸ்ட் பேட்டிங்கின் அழகாகும்”

Border

“பொதுவாக இது போன்ற சூழ்நிலைகளில் முதல் 15 – 20 ரன்கள் எடுப்பது மிகவும் கடினமாகும். ஆனால் அதன் பின் திடீரென்று உங்களால் எளிதாக ரன்களை எடுக்க முடியும். ஏனெனில் நீங்கள் கால சூழ்நிலைகளை பயன்படுத்த துவங்கி விடுவீர்கள். மேலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன்”

இதையும் படிங்க:அவர் தெ.ஆ டி20 தொடரில் விளையாடினால் நிறைய கத்துக்குவேன் – முன்னாள் இந்திய கேப்டனை பாராட்டும் ஐடன் மார்க்ரம்

“ஏனெனில் அவர்கள் இப்போது தான் இந்த வகையான பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதை கற்றுக்கொண்டு அதற்கேற்றார் போல் தங்களை உட்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள். எனவே இந்தியாவின் தரமான சுழல் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான பதில் என்னிடம் இல்லை” என்று கூறினார்.

Advertisement