Ashes 2023 : இவர் தாங்க உண்மையான கேப்டன், அஸ்வினின் உலக சாதனையை உடைத்து ஆஸியை வெற்றி பெற வைத்த பட் கமின்ஸ்

Pat Cummins 44
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் துவங்கியுள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் 2023 கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வெறும் 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது. பர்மிங்கம் நகரில் ஜூன் 16ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அதிரடியாக செயல்பட்டு 393/8 ரன்கள் குவித்து முதல் நாளிலேயே டிக்ளர் செய்து எக்ஸ்ட்ராவாக 40 – 50 ரன்கள் எடுக்கும் வாய்ப்பை கையில் வைத்திருந்தும் கோட்டை விட்டது தோல்விக்கு முக்கிய காரணமானது.

அதிகபட்சமாக ஜோ ரூட் 118* ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 4 விக்கெட்களை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா உஸ்மான் 141 ரன்கள் எடுத்த உதவியுடன் 386 ரன்கள் குவித்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஸ்டுவர்ட் ப்ராட் – ஓலி ராபின்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 7 ரன்கள் மட்டுமே முன்நிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து பொறுப்புடன் செயல்படாமல் மீண்டும் நேரடியாக விளையாட முயற்சித்து 273 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 300 ரன்கள் கூட இலக்காக நிர்ணயிக்காமல் சொதப்பியது தோல்விக்கு மற்றொரு காரணமானது.

- Advertisement -

கேப்டன் கமின்ஸ்:
இறுதியில் 281 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு வார்னர் 36, ஸ்மித் 6, லபுஸ்ஷேன் 6, டிராவிஸ் ஹெட் 16, அலெக்ஸ் கேரி 20, க்ரீன் 28 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர். போதாக்குறைக்கு மறுபுறம் நங்கூரமாக போராடிய கவாஜாவும் 65 ரன்களில் அவுட்டானதால் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலியாவுக்கு 54 ரன்கள் தேவைப்பட்டது. இது போன்ற சமயங்களில் பெரும்பாலும் சேசிங் செய்வது கடினம் என்ற நிலைமையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் நங்கூரமாகவும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் 2022 தொடரில் வெறும் 15 பந்துகளில் அரை சதமடித்தது போல் 4 பவுண்டரியும் 2 சிக்ஸரும் விளாசி வெற்றிக்கு போராடினார்.

கூடவே டெயில் எண்டரான நேதன் லயன் 2 பவுண்டரியுடன் 16* ரன்கள் எடுத்து கை கொடுத்ததை பயன்படுத்திய அவர் 44* ரன்கள் அடித்து தேர்ட் மேன் திசையில் பவுண்டரியுடன் சூப்பர் பினிஷிங் கொடுத்து த்ரில் வெற்றி பெற வைத்தார். அந்த வகையில் இந்த போட்டியில் 9வது இடத்தில் களமிறங்கி 44* ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டியில் 9 அல்லது அதற்கு கீழான பேட்டிங் வரிசையில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை உடைத்து புதிய உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

இதற்கு முன் கடந்த 2022 டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போது கடைசி நேரத்தில் 9வது இடத்தில் களமிறங்கி 42* ரன்கள் எடுத்த அஸ்வின் இந்தியாவை வெற்றி பெற வைத்ததே முந்தைய சாதனையாகும். அந்த விரிவான பட்டியல் இதோ:
1. பட் கமின்ஸ் (ஆஸ்திரேலியா) : 44*, இங்கிலாந்துக்கு எதிராக, 2023*
2. ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) : 42* வங்கதேசத்துக்கு எதிராக, 2022
3. வின்சென்ட் பெஞ்சமின் (வெஸ்ட் இண்டீஸ்) : 40* பாகிஸ்தானுக்கு எதிராக, 1088
4. சிட்னி பேர்ன்ஸ் (இங்கிலாந்து) : 38*, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 1908

இதையும் படிங்க:Ashes 2023 : தெறிக்க விட்ட ஆஸி, பாகிஸ்தானை நம்பி மோசம் போயிட்டீங்களே, இங்கிலாந்தை கலாய்க்கும் ரசிகர்கள் – காரணம் இதோ

இது மட்டுமன்றி இந்த போட்டியில் 38, 42* என மொத்தமாக 70 ரன்களும் 4 விக்கெட்களையும் எடுத்த பட் கமின்ஸ் ஆல் ரவுண்டராக கேப்டனாக முன்னின்று கடைசி நேரத்தில் திரில் வெற்றி பெற வைத்தார். மறுபுறம் இது போன்ற சூழ்நிலைகளில் சமீப காலங்களாகவே விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற இந்திய கேப்டன்கள் எந்த வெற்றியும் பெற்றுக் கொடுக்காத நிலையில் கடந்த வாரம் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையும் வென்று கொடுத்த இவர் இவர் தாங்க உண்மையான கேப்டன் என இந்திய ரசிகர்களே சமூக வலைதளங்களில் அவரை மனதார பாராட்டுகின்றனர்.

Advertisement