Ashes 2023 : தெறிக்க விட்ட ஆஸி, பாகிஸ்தானை நம்பி மோசம் போயிட்டீங்களே, இங்கிலாந்தை கலாய்க்கும் ரசிகர்கள் – காரணம் இதோ

ENg vs AUS Ben STokes Pat Cummins
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 2023 ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் பர்மிங்காம் நகரில் ஜூன் 16ஆம் தேதி துவங்கிய முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 393/8 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 118* ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேத்தன் லயன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார் அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடியும் 386 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா சதமடித்து 141 ரன்களும் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் மற்றும் ஸ்டுவர்ட் ப்ராட் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அதை தொடர்ந்து 7 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து அதிரடியாக விளையாடும் முனைப்புடன் செயல்பட்டு 273 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூப் ஆகியோர் தலா 46 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் மற்றும் நேதன் லயன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 281 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு வார்னர் 36, ஸ்மித் 6, லபுஸ்ஷேன் 6, டிராவிஸ் ஹெட் 16, அலெக்ஸ் கேரி 20, க்ரீன் 28 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர்.

இங்கிலாந்தின் தப்பு கணக்கு:
இருப்பினும் மறுபுறம் மீண்டும் நங்கூரமாக செயல்பட்ட உஸ்மான் கவாஜா 65 ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் அனல் பறந்த போட்டியில் கேப்டன் பட் கமின்ஸ் 44* ரன்களும் லயன் 16* ரன்களும் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் ஸ்டுவர்ட் ப்ராட் 3 விக்கெட்களை எடுத்தும் இங்கிலாந்து வெற்றி காண முடியவில்லை. முன்னதாக இந்த போட்டியில் முதல் நாளிலேயே அதிரடியாக செயல்பட்டு 393/8 ரன்கள் எடுத்த இங்கிலாந்து ஜோ ரூட் 118* ரன்களுடன் களத்தில் இருந்ததால் 400 – 450 ரன்களை எடுக்கும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியது.

- Advertisement -

ஆனால் ஆஸ்திரேலியாவை அச்சுறுத்துவதற்காக தேவையின்றி முதல் நாளில் கடைசி நேரத்தில் டிக்ளர் செய்த அந்த 2வது இன்னிங்ஸில் வெறும் 7 ரன்கள் முன்னிலை பெற்றபோது மீண்டும் கொஞ்சம் கூட பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தாமல் அதிரடியாகவே விளையாடுவோம் என்று அடம் பிடித்து 300 ரன்கள் கூட இலக்காக நிர்ணயிக்கத் தவறியது தோல்வியை கொடுத்தது. முன்னதாக ப்ரெண்டன் மெக்கல்லம் – பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான ஆட்டத்தை கையிலெடுத்து இங்கிலாந்து சொந்த மண்ணில் இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளை அடித்து நொறுக்கி வெற்றி பெற்றது

அதனால் பஸ்பாஸ் என அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடிய போதிலும் தரமான பவுலிங்க்கு எதிராக இதே அணுகு முறையால் வெளிநாட்டு மண்ணில் சாதிக்க முடியுமா? என்று விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த டிசம்பரில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இருமடங்கு அதிரடியாக செயல்பட்ட இங்கிலாந்து வெளிநாட்டு மண்ணிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து பாராட்டுகளை பெற்றது.

- Advertisement -

ஆனால் உண்மை என்னவெனில் அந்த தொடரில் பெரும்பாலும் தார் ரோட் போல இருந்த பிட்ச்சில் சுமாராக செயல்பட்ட பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து இதே அணுகுமுறையுடன் வெளிநாட்டுகளில் அசத்துகிறோம் என்ற போலியான தன்னம்பிக்கையை பெற்றது. அதன் காரணமாக கடந்த பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2வது போட்டியில் இதே போல அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து கடைசி பந்தில் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்றதை ரசிகர்கள் மறக்க முடியாது.

மொத்தத்தில் பாகிஸ்தானில் அசத்தியதால் அதீத தன்னம்பிக்கை கொண்ட இங்கிலாந்து இத்தொடரில் இதுவரை சந்தித்த இந்தியா, நியூஸிலாந்தை போன்ற அணிகளை விட தரமான பவுலிங்கை கொண்ட ஆஸ்திரேலியாவையும் எளிதில் சாய்த்து விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு தோற்று விட்டதாக நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்கின்றனர்.

இதையும் படிங்க:37 வயசுல இப்படி ஒரு ஆட்டமா? பேட்டிங் பவுலிங்ன்னு அசத்திய ஜிம்பாப்வே வீரர் – வியக்கும் கிரிக்கெட் உலகம்

மறுபுறம் இந்தியா, பாகிஸ்தானை போல் உங்களை அடிப்போம் என்று ஆரம்பத்திலேயே இங்கிலாந்து எச்சரித்தது. ஆனால் உங்களுடைய ஆட்டமெல்லாம் பாகிஸ்தான் போன்ற அணிகளிடம் வைத்துக் கொள்ளுங்கள் தரமான பவுலிங்கை கொண்ட எங்களிடம் வேலைக்காகாது என்று வாயில் கொடுத்த பதிலடியை செயலிலும் காட்டிய ஆஸ்திரேலியா தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்து 1 – 0* (5) என ஆரம்பத்திலேயே இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement