37 வயசுல இப்படி ஒரு ஆட்டமா? பேட்டிங் பவுலிங்ன்னு அசத்திய ஜிம்பாப்வே வீரர் – வியக்கும் கிரிக்கெட் உலகம்

Sikandar-Raza
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்று மோதவுள்ள வேளையில் ஏற்கனவே இந்த தொடருக்காக 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. அதில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அடங்கும்.

ZIM vs NED

- Advertisement -

அவர்களை தவிர்த்து மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான தகுதிச் சுற்று போட்டிகளானது தற்போது ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. அதில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, ஓமன், யுஏஇ, அயர்லாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா, நேபாளம் போன்ற பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தகுதிச்சுற்று போட்டியில் நேற்று நெதர்லாந்து அணியை எதிர்த்து விளையாடிய ஜிம்பாப்வே அணியானது 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பிரமாண்ட இலக்கினை துரத்திய வேளையில் 40.5 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 319 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Sikandar Raza 1

இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி சார்பாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணியின் அனுபவ வீரரான சிக்கந்தர் ராசா பேட்டிங்கில் 54 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் என 102 ரன்களையும், பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 55 ரன்கள் விட்டுக் கொடுத்து
4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

- Advertisement -

பொதுவாகவே கிரிக்கெட்டில் வயதாக ஆக வீரர்களின் செயல்பாடு குறைய துவங்கும் வேளையில் கடந்த சில ஆண்டுகளாக மிகச்சிறப்பான ஃபார்மில் இருக்கும் ஜிம்பாப்வே சிக்கந்தர் ராசா தற்போது 37 வயதில் உச்சகட்ட பார்மில் அசத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் 54 பந்துகளில் சதம் கடந்த அவர் அதிவேக சதம் அடித்த ஜிம்பாப்வே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக்கின் சாதனையை முந்திய டேவிட் வார்னர். வேறலெவல் தான் – விவரம் இதோ

இப்படி 37 வயதான இவர் பேட்டிங்கில் அதிரடியான சதம் அடித்தது மட்டுமின்றி பந்து வீச்சிலும் நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய அவரது ஆட்டமானது கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement