பாண்டியாவும், பும்ராவும் இன்னைக்கு இவ்ளோ பெரிய ஆளா இருக்குறதுக்கு காரணமே அவர் ஒருத்தர் தான் – பார்த்திவ் படேல் கருத்து

Parthiv-Patel
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐந்து கோப்பைகளுடன் சிஎஸ்கே அணியுடன் தற்போது சமநிலையில் உள்ளது. மும்பை அணியில் ஜாம்பவான் கேப்டனாக இருந்தும் ஆரம்ப கட்டத்தில் அந்த அணியால் கோப்பையை கைப்பற்ற முடியாத வேளையில் ரோகித் சர்மா மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பினை ஏற்றதிலிருந்து ஐந்து முறை கோப்பையை வென்று மிகப்பெரிய அணியாக இன்று வளர்ந்து நிற்கிறது.

இந்நிலையில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹார்டிக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கேப்டனாக நியமித்தது பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்திய வேளையில் அணியில் உள்ள சக வீரர்களான பும்ரா மற்றும் சூரியகுமார் யாதவே ரோகித் கேப்டன் பதிவிலிருந்து நீக்கப்பட்டது குறித்து வருத்தத்தை மறைமுகமாக தெரிவித்து இருந்தனர்.

- Advertisement -

மேலும் ரோகித் சர்மா கேப்டன் பதிவிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களும் தங்களது எதிர்ப்பை வெளியிட்டு மும்பை இந்தியன்ஸ் அணியை பின்தொடர்வதை தவிர்த்தனர். இந்நிலையில் ரோகித் சர்மா கேப்டனாக இல்லாத இந்த சீசன் எவ்வாறு இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள வேளையில் ரோகித் சர்மா குறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகிகளான ஜாகிர் கான் மற்றும் பார்த்திவ் பட்டேல் ஆகியோர் பல்வேறு விடயங்களை வெளிப்படையாக பகிர்ந்திருந்தனர்.

அந்த வகையில் பார்த்திவ் பட்டேல் கூறுகையில் : கடந்த 2016-ஆம் ஆண்டு ஹார்டிக் பாண்டியா மும்பை அணிக்குள் 10 லட்ச ரூபாய் என்கிற அடிப்படை விலைக்காகவே வாங்கப்பட்டார். அந்த சீசனில் அவரது செயல்பாடு பெரியளவில் இல்லை என்பதனால் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் அவரை கண்டு கொள்ளவில்லை. மேலும் அவரை அணியிலிருந்து விடுவிக்கவும் ஆலோசனைக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அப்போது கேப்டனாக இருந்த ரோகித் சர்மா தான் பாண்டியாவிடம் இருந்த திறமையை கருத்தில் கொண்டு தொடர்ந்து அவர் விளையாட வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் அணியிடம் கேட்டுக்கொண்டார். அப்படி மீண்டும் ரோகித் சர்மா அவருக்கு தொடர்ச்சியாக கொடுத்த வாய்ப்புகள் காரணமாகவே இன்று பாண்டியா மிகப்பெரிய வீரராக மாறியிருக்கிறார். அதேபோன்று கடந்த 2015-ஆம் ஆண்டு பும்ரா முதல்முறையாக மும்பை அணிக்கு வந்த போது அவரது செயல்பாடுகள் மீது அணியின் நிர்வாகம் அதிருப்தி அடைந்தது. இதனால் அந்த சீசனின் பாதியிலேயே அவரை வெளியேற்றலாம் என்று முடிவு செய்தது.

இதையும் படிங்க : 169 ரன்ஸ்.. ஏணி வெச்சாலும் எட்டாத சாதனை.. கலங்கிய குல்கர்னி.. விதர்பாவை விளாசி சாதித்த மும்பை

அவ்வேளையில் ரோகித் சர்மா தான் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திடம் அவரை தக்க வைக்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு அடுத்த வருடமே மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இன்று இந்திய அணியின் முன்னணி வீரராக இருப்பது மட்டுமின்றி உலகின் நம்பர் 2 வேகப்பந்து வீச்சாளராகவும் மாறியிருக்கிறார். இப்படி ஹார்டிக் பாண்டியா மற்றும் பும்ரா ஆகியோரது கரியரின் மாற்றத்திற்கு மிக முக்கிய காரணமே ரோகித் சர்மாவின் ஆதரவு தான் என பார்த்திவ் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement