இவரை ஏன் டி20 பவுலராவே பாக்கமாட்றீங்க. அவரை டீம்ல எடுங்க 31 வயது வீரரை ஆதரித்த – பார்த்திவ் பட்டேல்

Parthiv
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் வரும் அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பையானது நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக தற்போது அனைத்து அணிகளும் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணி வீரர்களை தேர்வு செய்ததில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியும் இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஒரு அணியுடன் செல்ல வேண்டும் என்பதன் காரணமாக அணியில் ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டு வந்து தற்போது பலமாக கட்டமைத்து வருகிறது.

Team India Jasprit Bumrah

- Advertisement -

ஆனால் கடைசியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விளையாடிய முகமது ஷமியை இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாட வைக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது. ஏனெனில் கடந்த உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் t20 கிரிக்கெட்டில் விளையாடாத முகமது ஷமி ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடினார். அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக இந்திய டி20 அணியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். எனவே நிச்சயம் இந்த உலகக் கோப்பை தொடரில் ஷமி விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஷமி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசித்தியிருந்த வேளையில் அவரை ஆதரித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேல் கூறுகையில் : முகமது ஷமி மிகவும் துல்லியமாகவும், சிறப்பாகவும் வந்து வீசி வருகிறார்.

Shami-1

அவரை ஏன் டி20 அணியில் இந்திய அணி புறக்கணித்து வருகிறது என்பது புரியவில்லை. என்னை பொறுத்தவரை முகம்மது ஷமி இந்த இங்கிலாந்து தொடரில் தனது திறனை நிரூபிக்கும் பட்சத்தில் அவருக்கு டி20 போட்டிகளில் வாய்ப்பினை கொடுக்க வேண்டும். ஏனெனில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடிய அவர் 16 போட்டியில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

- Advertisement -

அதோடு பெரும்பாலும் தான் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். டெத் ஓவர்களில் அவரால் சிறப்பாக பந்து வீச முடியாது என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் டெத் ஓவர் வீச அவசியமே இன்றி அவரை இந்திய அணியால் பயன்படுத்த முடியும்.

இதையும் படிங்க : IND vs ENG 2nd ODI : தொடரை கைப்பற்றுமா இந்தியா, லார்ட்ஸ் மைதான எப்படி? – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

அவருடைய அனுபவமும், அவருடைய திறனும் நிச்சயம் இந்திய அணிக்கு டி20 உலக கோப்பையின் போது உதவும். என்னை பொறுத்தவரை அவருக்கு t20 உலக கோப்பை தொடரில் வாய்ப்பினை வழங்கலாம் என பார்த்திவ் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement