- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முக்கியமான இந்த கடைசி டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் இதை செய்வார் – பார்த்திவ் படேல் நம்பிக்கை

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நடப்பு ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் இதுவரை தான் விளையாடிய 8 இன்னிங்ஸ்களில் 90 ரன்கள் சராசரியுடன் ஒரு இரட்டை சதம் உட்பட நான்கு சதங்களுடன் 722 ரன்கள் குவித்து அமர்க்களமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த தொடரில் சாதனைக்கு மேல் சாதனைகளை நிகழ்த்தி வரும் அவர் இறுதிப் போட்டியிலும் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசி போட்டியிலும் சுப்மன் கில் அசத்துவார் : பார்த்திவ் படேல் நம்பிக்கை

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது நாளை ஜூலை 31-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்க இருக்கும் வேளையில் தற்போது இந்திய அணியானது முழு வீச்சில் இந்த போட்டிக்காக தயாராகி வருகிறது. ஏனெனில் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை இந்திய அணியால் இரண்டுக்கு இரண்டு (2-2) கணக்கில் சமன் செய்ய முடியும்.

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த ஐந்தாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மீண்டும் ஒரு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் படேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

இந்த இங்கிலாந்து தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பலரும் சுப்மன் கில்லின் பேட்டிங் குறித்து விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். ஆனால் முதல் நான்கு போட்டிகளிலேயே அவர் 600 ரன்களுக்கு மேல் அடித்து தனது திறனை நிரூபித்து விட்டார். அதுமட்டும் இன்றி இனி வரப்போகும் கேள்விகளுக்கும் தனது பேட்டால் பதில் அளிப்பார் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

என்னைப் பொறுத்தவரை தற்போது அட்டகாசமான பார்மில் இருக்கும் அவர் ஐந்தாவது போட்டியிலும் மிகச் சிறப்பான ஒரு இன்னிங்ஸை வழங்குவார் என்று நினைக்கிறேன் என பார்த்திவ் பட்டேல் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ரிஷப் பண்ட் காயம் அடைந்துள்ளதால் அவரது இடத்தில் துருவ் ஜுரேல் களமிறங்குவார். ஆனால் அவர் எந்த பேட்டிங் ஆர்டரில் களமிறங்குவார் என்பதுதான் கேள்வியாக உள்ளது.

இதையும் படிங்க : ஒரு பேட்ஸ்மேன் குறைஞ்சாலும் பரவாயில்ல.. அந்த பவுலரை டீம்ல சேருங்க – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

இந்திய அணியை பொறுத்தவரை கே.எல் ராகுல், ஜெய்ஸ்வால் ஆகியோர் மிகச் சிறப்பான துவக்கத்தை இந்த தொடர் முழுவதுமே வழங்கி வருகின்றார். இந்திய அணியின் பேட்டிங் ஆடரும் வலுவாக இருப்பதால் நிச்சயம் இந்த ஐந்தாவது போட்டியில் இந்திய அணி வெற்றிக்காக முழு உழைப்பையும் வெளிப்படுத்தும் என பார்த்திவ் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -