ஒரு பேட்ஸ்மேன் குறைஞ்சாலும் பரவாயில்ல.. அந்த பவுலரை டீம்ல சேருங்க – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

Sanjay Manjrekar
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது நாளை ஜூலை 31-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இந்த தொடரில் விளையாடி வரும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளதால் இந்த இறுதிப்போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. இதன் காரணமாக தற்போது இந்திய அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

கடைசி போட்டியில் அவரை சேருங்க : சஞ்சய் மஞ்சரேக்கர்

இந்த கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியில் இடம் பிடித்துள்ள பல்வேறு வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் நிச்சயமாக இந்த கடைசி போட்டிக்கான பிளேயிங் லெவனில் மாற்றங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் விளையாட வைக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் தனது கருத்தினை முன்வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போதைய நிலையில் இந்திய அணி இந்த தொடரில் ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி வீரர்களின் தேர்வில் சில முக்கிய தவறுகளை செய்து விட்டதாலயே இந்த பின்னடைவை சந்தித்துள்ளதாக பார்க்கிறேன். என்னை பொறுத்தவரை அடுத்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டுமெனில் இங்கிலாந்து அணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும். பும்ரா போன்ற ஒரு வீரர் கடைசி போட்டியில் விளையாடாத வேளையில் 20 விக்கெட்டுகளை வீழ்த்த இன்னும் சிறப்பான ஒரு பந்துவீச்சாளர் அவசியம்.

- Advertisement -

அந்த வகையில் பார்க்கையில் குல்தீப் யாதவை அணிக்குள் கொண்டு வந்தால் நிச்சயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பொறுத்தவரை எவ்வித பயமும் கிடையாது. ஏனெனில் ஜடேஜா வாஷிங்டன் சுந்தர் போன்றோர் கூட அற்புதமாக பேட்டிங் செய்கின்றனர்.

இதையும் படிங்க : இன்னும் 89 ரன்கள் தான்.. 89 வருட டான் பிராட்மேனின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – சுப்மன் கில்

எனவே பிளேயிங் லெவனில் ஒரு பேட்ஸ்மேன் குறைந்தால் கூட பரவாயில்லை குல்தீப் யாதவை அணிக்குள் கொண்டு வரவேண்டும். கடந்த போட்டியில் ஷர்துல் தாகூரை ஆல்ரவுண்டராக இணைத்தார்கள். ஆனால் அவரால் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. எனவே அவரை நீக்கிவிட்டு குல்தீப் யாதவை இணைக்குமாறு சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement