இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக செயல்பட்டு வரும் சுப்மன் கில் இந்த தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளார். ஏனெனில் நடைபெற்று வரும் இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு இரட்டை சதம் உட்பட நான்கு சதங்களுடன் 722 ரன்கள் குவித்துள்ளார்.
பிராட்மேனின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் சுப்மன் கில் :
கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தனது திறனுக்கு ஏற்ப பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று பலரும் பேசி வந்த வேளையில் நடைபெற்று இந்த தொடரில் 90 ரன்கள் சராசரியுடன், ஒரு இரட்டை சதம் உட்பட நான்கு சதங்களுடன் 722 ரண்களை குவித்து அசத்தியுள்ளார். இதன் காரணமாக அவரது ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் சராசரி 40-க்கு மேல் சென்றுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் விளையாட இருக்கும் அவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவானான டான் பிராட்மேனின் 89 வருட சாதனையை முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதுகுறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தயிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் சுப்மன் கில் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை 8 இன்னிங்சில் விளையாடியுள்ள அவர் 722 ரன்கள் அடித்துள்ள வேளையில் எதிர்வரும் ஐந்தாவது போட்டியில் மேலும் 89 ரன்கள் அடித்தால் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த கேப்டன் என்ற உலக சாதனையை நிகழ்த்துவார்.
இதற்கு முன்னதாக 1936-37 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய கேப்டன் டான் பிராட்மேன் 810 ரன்கள் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. இந்த சாதனையை முறியடிக்க சுப்மன் கில்லுக்கு இன்னும் 89 ரன்கள் தேவை. அதனை சுப்மன் கில் அடிக்கும் பட்சத்தில் இந்த சாதனை எதிர்காலத்தில் முறியடிக்கப்படாத சாதனையாக கூட மாற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியாவை இன்னும் 1947க்கு முந்தைய அடிமைன்னு நினைக்கிறிங்களா? ஓவல் க்யூரேட்டரை சாடிய பதான்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது நாளை ஜூலை 31-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3.30க்கு துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.



