அனில் கும்ப்ளே சாதனையை கண்டிப்பாக இவர்தான் முறியடிப்பார் – பார்த்திவ் படேல் ஓபன்டாக்

Parthiv
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் விளையாடி வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 – 0* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. முன்னதாக கடந்த மார்ச் 4ஆம் தேதியன்று மொகாலியில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

jadeja

- Advertisement -

இதை அடுத்து இவ்விரு அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 12ஆம் தேதியன்று பெங்களூருவில் துவங்க உள்ளது. இந்த போட்டி வாயிலாக வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் ஒரு பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடி சரித்திரம் படைக்க உள்ளன.

கபில் தேவை முந்திய அஷ்வின்:
முன்னதாக மொகாலியில் நடந்த முதல் போட்டியில் பேட்டிங்கில் 61 ரன்கள் குவித்து பந்துவீச்சில் 6 விக்கெட்டுகள் எடுத்த ரவிசந்திரன் அஸ்வின் ஒரு நல்ல ஆல்-ரவுண்டராக செயல்பட்டு இந்தியாவின் வெற்றியில் முக்கியப் பங்காற்றினார். குறிப்பாக அந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் எடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 2வது இந்திய பந்துவீச்சாளர் என்ற ஜாம்பவான் கபில்தேவ் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார்.

ashwin 1

இந்தியாவுக்காக 80களில் வெற்றி மேல் வெற்றிகளை வாங்கிக் கொடுத்த முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் கபில்தேவ் 131 போட்டிகளில் 434 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்திருந்தார். தற்போது 85 போட்டிகளில் 436* விக்கெட்டுகள் எடுத்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் அவரை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்து வீச்சாளராக 619 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கும் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவை அவர் தொடுவாரா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

நிச்சயம் தொடுவார்:
இந்நிலையில் அனில் கும்ப்ளேவின் சாதனையை கண்டிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் தொடுவார் என்று முன்னாள் இந்திய வீரர் பார்த்தீவ் பட்டேல் கணித்துள்ளார். இதுபற்றி மொஹாலி டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் அவர் பேசியது பின்வருமாறு. “2008ஆம் ஆண்டு நாங்கள் இருவருமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினோம். அந்த சமயத்தில் அவர் முத்தையா முரளிதரனுடன் நிறைய நேரங்களை செலவிட்டார். அஷ்வினுக்கு பாராட்டுக்கள். 436 விக்கெட்டுக்கள் என்பது மிகப்பெரிய சாதனையாகும். இப்போது போலவே அவர் அடுத்த 3 – 4 வருடங்கள் தொடர்ந்து விளையாடினால் அனில் கும்ப்ளேவின் சாதனையை நெருங்க முடியும் அல்லது உடைக்கக் கூட முடியும்” என கூறினார்.

Ravichandran Ashwin Parthiv Patel Anil Kumble

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளராக மகத்தான சாதனை படைத்த இலங்கையின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடினார். அந்த சமயங்களில் அதே சென்னை அணியில் அஸ்வின், பார்திவ் படேல் ஆகியோர் சேர்ந்து விளையாடினார்கள். அந்த நேரத்தில் முரளிதரனிடம் இருந்து நிறைய அனுபவங்களை கற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் நிச்சயமாக கும்ப்ளேவின் சாதனையை தொடுவார் என பார்த்திவ் படேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

வாய்ப்பு உள்ளது:
“பிட்ச் எப்படி உள்ளது என்பதைப் படிக்கும் அஸ்வின் அதற்கு ஏற்றார் போல் தனது பந்துகளில் வேகத்தை மாற்றுகிறார். அத்துடன் பேட்ஸ்மேன்களை அவுட் செய்ய எந்த இடத்தில் பந்துவீச வேண்டும் என்பதுபற்றி விக்கெட் கீப்பர்களுடன் ஆலோசனை செய்கிறார். இது போன்ற அம்சங்கள் வெளிநாடுகளில் நீங்கள் பந்து வீசும்போது உதவியாக இருக்கும். ஏனெனில் அங்கு பந்து அதிகமாக சுழலாது என்பதால் காற்றைப் பயன்படுத்துவது போன்ற உத்திகளை கையாள வேண்டியது வரும். மேலும் ரவுண்ட் தி விக்கெட் திசையில் ஸ்டீவ் ஸ்மித்தை அவர் அவுட் செய்ததையும் பார்த்துள்ளோம். எனவே மைதானத்திற்கு ஏற்றவாறு அவர் பந்து வீசுகிறார்” என இது பற்றி மேலும் தெரிவித்த பார்த்தீவ் பட்டேல் அனில் கும்ப்ளே, கபில் தேவ், ஹர்பஜன் சிங் போன்ற ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்துள்ள அஸ்வின் பல இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக செயல்படுகிறார் என பாராட்டினார்.

இதையும் படிங்க : சாதிச்சுட்டீங்க – வாழ்த்துக்கள்! இனி நீங்க ப்ரீயா ஆடலாம். அஷ்வினை பாராட்டி கலாய்த்த சேவாக் – எதற்கு தெரியுமா?

அத்துடன் கபில் தேவ், ஹர்பஜன் சிங் போன்றவர்களை பார்த்து விளையாடத் தொடங்கிய அஸ்வின் இன்று 11 வருடங்கள் கழித்து அவர்களை முந்தி சாதனைப் படைத்துள்ளதாக கூறினார். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த ஒட்டுமொத்த பந்து வீச்சாளர்களின் பட்டியலில் டாப் 10க்குள் நுழைந்துள்ள அஷ்வின் தற்போது 9வது இடத்தில் உள்ளார். அதே பட்டியலில் 3வது இடத்தில் உள்ள அனில் கும்ப்ளேவை பிடிக்க அஸ்வினுக்கு இன்னும் 184 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement