சாதிச்சுட்டீங்க – வாழ்த்துக்கள்! இனி நீங்க ப்ரீயா ஆடலாம். அஷ்வினை பாராட்டி கலாய்த்த சேவாக் – எதற்கு தெரியுமா?

Sehwag
- Advertisement -

உலக அளவில் இருக்கும் கிரிக்கெட் போட்டிகளை துபாயில் இருக்கும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் எனப்படும் ஐசிசி தனது கட்டுப்பாட்டில் நேர்வழியில் நடத்தி வருகிறது. உலகில் எந்த சர்வதேச போட்டிகள் நடந்தாலும் அதற்கு இந்த அமைப்பிடம் முதலில் அனுமதி பெற்றாக வேண்டும். இருப்பினும் சர்வதேசம் முதல் உள்ளூர் வரை நடைபெறும் பல்வேறு வகையான முதல்தர கிரிக்கெட் போட்டிகளின் அடிப்படை விதிகளை இங்கிலாந்தைச் சேர்ந்த எம்சிசி எனப்படும் “மேர்லிபோன் கிரிக்கெட் கிளப்” என்ற அமைப்புதான் உருவாக்கியது என பல கிரிக்கெட் ரசிகர்களும் அறிவார்கள்.

லத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப கிரிக்கெட்டின் அடிப்படை விதி முறைகளிலும் பல்வேறு மாற்றங்களை இந்த அமைப்பு செய்வது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் கிரிக்கெட்டின் அடிப்படை விதி முறைகளில் 8 புதிய மாற்றங்களை எம்சிசி இன்று அறிவித்துள்ளது.

- Advertisement -

8 புதிய மாற்றங்கள்:
பந்து வீசும் பவுலர்கள் பந்தில் உமிழ்நீரை பயன்படுத்த நிரந்தர தடை, நாய்கள் மற்றும் பறவைகள் போன்ற வெளிப்புற காரணிகளால் ஒரு பந்து தடைபட்டால் அது டெட் பால் என அறிவிக்கப்படும் என்பது போன்ற பல்வேறு வகையான அம்சங்களைக் கொண்ட 8 புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் சர்வதேச கிரிக்கெட்டில் நடைமுறைக்கு வருவதாக எம்சிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில் மன்கட் அவுட் செய்யும் முறை ரன் அவுட் என எம்சிசி மாற்றம் செய்து அறிவித்துள்ளது மிக மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. கடந்த 1845 முதலே இந்த வகையில் அவுட் செய்யும் நடைமுறையில் இருந்து வந்த நிலையில் கடந்த 1947 ஆம் ஆண்டு பில் ப்ரவுன் எனும் ஆஸ்திரேலிய வீரரை இந்தியாவின் வினோ மன்கட் அவுட் செய்தது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. அப்போது முதல் பந்தை எதிர் கொள்ளும் பேட்ஸ்மேனுக்கு எதிர்ப்புறத்தில் இருக்கும் பேட்ஸ்மேன் கிரீஸ் எனப்படும் வெள்ளை கோட்டை தாண்டும்போது அவரை பவுலர் அவுட் செய்தால் அதை ரன் அவுட் என்று அழைக்காமல் “மன்கட்” என அனைவரும் அழைக்கத் தொடங்கினார்கள்.

- Advertisement -

சாதித்த அஷ்வின்:
குறிப்பாக கடந்த 2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய தமிழகத்தின் ரவிசந்திரன் அஸ்வின் மன்கட் செய்தது உலக அளவில் மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. கிரிக்கெட்டின் விதிமுறைப்படி இது சரிதான் என்றாலும் இந்த வகையில் அவுட் செய்வது நம்பிக்கை துரோகத்தை போல் உள்ளதாக பலரும் அஸ்வின் மீது குற்றம் சாட்டியிருந்தனர்.

அதன்பின் உலகில் எங்கு மன்கட் செய்யப்பட்டாலும் அதற்கு அஸ்வின் தான் என்பதுபோல் அவரை அனைவரும் கிண்டல் அடித்தார்கள். இருப்பினும் அதற்கெல்லாம் அசராத அஸ்வின் நான் விதிமுறைப்படியே நடந்து கொண்டேன் என தொடர்ந்து கூறி வந்தார். மேலும் ஒரு பவுலர் வெள்ளை கோட்டை தாண்டி அரை இன்ச் காலை வைத்தால் கூட உடனே அதை நோ-பால் எனக்கூறி அதற்கு தண்டனையாக பிரீ ஹிட் வழங்குகிறார்கள். ஆனால் ஒரு பேட்ஸ்மேன் பந்து வீசுவதற்கு முன்பே பல இன்ச்கள் வெள்ளை கோட்டை தாண்டுவதில் என்ன நியாயம் என்ற நியாயமான கேள்வியை அவர் தொடர்ச்சியாக எழுப்பி வந்தார்.

- Advertisement -

பாராட்டிய சேவாக்:
இந்நிலையில் இனிமேல் வெள்ளைக்கோட்டை தாண்டினால் எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவர்களை ஒரு பவுலர் அவுட் செய்தால் அதை மன்கட் என்று அழைக்காமல் ரன்-அவுட் என்று தான் அழைக்க வேண்டும் என எம்சிசி என கண்டிப்போடு அறிவித்துள்ளது. இதன் காரணமாக இனிமேல் மன்கட் செய்யப்பட்டால் அது ரன்-அவுட் என்று அழைக்கப்படுவதுடன் அதற்காக சர்ச்சை எதுவும் ஏற்படாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும் இனிமேல் விதிமுறைப்படி பந்து வீசுவதற்கு முன்பே வெள்ளை கோட்டை தாண்ட அனைத்து பேட்ஸ்மேன்களும் யோசிப்பார்கள் என்பதால் பேட்ஸ்மேன்களுக்கு பவுலர்களுக்கும் சமமான நியாயம் கிடைத்துள்ளது. இப்படி பந்துவீச்சாளர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதிக்கு ஒரு வழியாக நியாயம் கிடைத்துள்ளதால் அனைத்து பந்து வீச்சாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இது மன்கட் அநியாயத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என முன்னாள் இந்திய வீரர் விரேந்திர சேவாக் கலகலப்புடன் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “வாழ்த்துக்கள் அஷ்வின், உங்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த வாரமாக அமைந்தது. முதலில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த 2-வது இந்திய பந்துவீச்சாளராக சாதனை படைத்தீர்கள், இப்போது இது. இனிமேல் ஜோஸ் பட்லரை சுதந்திரமாக உங்களால் ரன் அவுட் செய்ய முடியும். விரைவில் அது போன்ற ஒன்றை செய்யுங்கள்” என கலாய்ப்பது போல் பாராட்டினார்.

இதையும் படிங்க : தோனி கூட குடும்பம் நடத்துறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? – கஷ்டங்களை பகிர்ந்த சாக்ஷி தோனி

சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2வது இந்திய பந்து வீச்சாளராக ஜாம்பவான் கபில் தேவை முந்தி அஷ்வின் சாதனை படைத்தார். இருப்பினும் இந்த முறை அஷ்வின் – பட்லர் ஆகிய இருவருமே ராஜஸ்தான் அணிக்காக ஒரே அணியில் விளையாட உள்ளதால் சேவாக் வேண்டுகோளுக்கு இணங்க பட்லரை அவர் அவுட் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement