தோனி கூட குடும்பம் நடத்துறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? – கஷ்டங்களை பகிர்ந்த சாக்ஷி தோனி

Sakshi
- Advertisement -

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக பெயரெடுத்தவர் மகேந்திர சிங் தோனி. ஐசிசி நடத்திய அனைத்து வகையான டிராபியையும் கைப்பற்றி கொடுத்த ஒரே இந்திய கேப்டனாக திகழ்ந்த மஹேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து இன்றளவும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக பங்கேற்று விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி ஓய்வு பெற்ற பிறகும் கூட இன்றளவும் தோனியின் ரசிகர்களுக்கு அவர் மீதுள்ள ஈர்ப்பு குறையவில்லை என்றே கூறலாம்.

Dhoni-3

- Advertisement -

அந்த அளவிற்கு தற்போதும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமான ஒரு நபராக தோனி விளங்கி வருகிறார். தோனி கிரிக்கெட் வீரர்களை தாண்டி பொது வெளியிலும் ஒரு நல்ல மனிதராகவே அறியப்பட்டு வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட தோனிக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் உள்ளது. தோனியின் மனைவி சாக்ஷி சிறிது காலம் காதலில் இருந்த பின்னரே தோனியை மணந்துகொண்டார்.

இந்நிலையில் தற்போது மகளிர் தினம் கொண்டாடப்பட்ட வேளையில் தோனியுடன் குடும்பம் நடத்துவதில் உள்ள கஷ்டங்களை அவர் சிஎஸ்கே அணியின் சமூக வலைதள பக்கம் மூலமாக பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனியுடன் வாழ வேண்டுமெனில் பல விடயங்களை நாம் பொறுத்துக் கொண்டு, மாற்றிக் கொண்டு வாழ வேண்டும். ஏனெனில் அலுவலகத்திற்கு செல்லும் ஒரு நபரை நாம் திருமணம் செய்தால் கூட அவர்களுக்காக நம் வாழ்க்கை நடைமுறைகளை சில விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இதுவே நாம் ஒரு விளையாட்டு வீரரை திருமணம் செய்து கொண்டால் நிறைய பழகிக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு மிகப்பெரிய பிரபலத்தின் மனைவியாக நீங்கள் இருக்கும்போது உங்களுக்கு என்று பிரைவசி இருக்காது. எங்கு சென்றாலும் உங்களை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். எப்போதுமே நாம் கேமரா முன் இருப்பது போன்று நிஜ வாழ்க்கையிலும் இருக்கமாட்டோம். எனவே பொதுவெளியில் நாம் சரியாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

- Advertisement -

அதேபோன்று பிரபலங்களின் மனைவியாக இருக்கும் போது நாம் நண்பர்களுடன் வெளியே சென்று வந்தால் கூட அதை தவறாக எண்ணி பல கருத்துக்களை பகிர்வார்கள். இப்படி பல கருத்துக்கள் பகிரப்படும் போதும் நாம் சகஜமாக எடுத்துக் கொள்ள தயாராக இருக்கவேண்டும். ஒருபுறம் இப்படி ஒரு பிரபலத்தின் மனைவியாக பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும் கணவரால் நாட்டிற்கே பெருமை என்பதை என்ற போது நமக்கும் அது கூடுதல் பெருமையாக இருக்கும். தோனிக்கு மனைவியாக இருப்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சிதான் என்று சாக்ஷி தோனி பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐ.சி.சி வெளியிட்டுள்ள புதிய 8 ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ். அஷ்வினால் ஒரு புது ரூல்ஸ்ஸே வந்திருக்கு – முழுவிவரம் இதோ

40 வயதை எட்டியுள்ள தோனி இன்றளவும் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராகவும், அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அவர் ஓய்வு பெற்றாலும் தொடர்ச்சியாக சிஎஸ்கே அணியில் ஒரு முக்கிய பொறுப்பில் நீடிப்பார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement