ஐ.சி.சி வெளியிட்டுள்ள புதிய 8 ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ். அஷ்வினால் ஒரு புது ரூல்ஸ்ஸே வந்திருக்கு – முழுவிவரம் இதோ

ICC
- Advertisement -

துபாயில் இருக்கும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் எனப்படும் ஐசிசி உலக அளவில் நடைபெறும் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நேர்வழியில் கட்டுக் கோப்புடன் நடத்தும் ஒரு அமைப்பு என நாம் அனைவரும் அறிவோம். எந்த நாட்டில் எந்த சர்வதேச போட்டி நடந்தாலும் அது இந்த அமைப்பிடம் முறையாக அனுமதி பெற்ற பின்னரே நடைபெற்று வருகிறது. இருப்பினும் என்னதான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஐசிசி நடத்தினாலும் அதற்கான அடிப்படை விதிமுறைகளை எம்சிசி எனப்படும் “மேர்லிபோன் கிரிக்கெட் கிளப்” எனும் அமைப்புதான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

ICC

- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் நகரை சேர்ந்த இந்த அமைப்பு காலத்தின் வளர்ச்சிக்கேற்ப கிரிக்கெட்டிற்கு தேவையான அடிப்படை விதிமுறைகளை அவ்வப்போது மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் கிரிக்கெட்டில் சமீப காலங்களாக மிகப் பெரிய சர்ச்சையாக பேசப்பட்டு வரும் “மன்கட்” எனப்படும் அவுட் செய்யும் முறை விளையாட்டின் நேர்மை தன்மையை மீறுவதாக பலரும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

மன்கட் சர்ச்சை:
அதாவது மன்கட் என்பது ஒரு போட்டியில் ஒரு பேட்டர் பந்தை எதிர்கொள்ள தயாராக இருக்கும்போது அவரின் எதிர்புறத்தில் இருக்கும் மற்றொரு பேட்டர் அந்த பகுதியில் உள்ள கிரீஸ் எனப்படும் வெள்ளைக்கோட்டை தாண்டும்போது அந்த பந்தை வீச இருக்கும் பந்துவீச்சாளர் ஸ்டம்ப்பில் பந்தை அடித்து அவுட் செய்யும் முறையாகும். 1845ஆம் ஆண்டிலிருந்தே இது விதிமுறைப்படி அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த 1947ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒரு போட்டியில் இந்தியாவின் முன்னாள் வீரர் “வினோ மன்கட்” பில் பிரவுன் எனப்படும் ஆஸ்திரேலிய வீரரை இந்த முறையில் அவுட் செய்ததிலிருந்து அவரின் பெயர் இந்த அவுட்டுக்கு வந்துவிட்டது.

Ravichandran Ashwin Jos Buttler Mankad

அதன்பின் கடந்த 2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பேட்டிங் செய்த இங்கிலாந்து நட்சத்திரம் ஜோஸ் பட்லரை பஞ்சாப் அணிக்காக விளையாடிய தமிழகத்தின் அஸ்வின் இந்த முறையில் அவுட் செய்து உலக அளவில் மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. இந்த மன்கட் விதிமுறைப்படி சரிதான் என்றாலும் ஒரு பவுலர் பந்து வீசுவார் என்ற நம்பிக்கையில் எதிர்புறம் இருக்கும் பேட்ஸ்மென் அந்த வெள்ளை கோட்டை தாண்டி வெளியே வரும் வேளையில் நம்பிக்கை துரோகம் செய்வது போல் மன்கட் செய்யும் முறை உள்ளதாக பலரும் குற்றம் சாட்டி வந்தனர்.

- Advertisement -

அஷ்வினுக்கு கிடைத்த வெற்றி:
ஆனால் இதே ஒரு பந்து வீச்சாளர் அதே வெள்ளை கோட்டை தாண்டி அரை இன்ச் காலை வைத்து பந்து வீசினால் உடனே அது நோ பால் என அறிவிக்கப்பட்டு அதற்கு தண்டனையாக பிரீ ஹிட் கொடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த வேளையில் இந்த மன்கட் அவுட்டுக்கு ஆதரவாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த பல வருடங்களாக தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்து வருகிறார்.

icc

இதற்காக உலகில் எங்கு மன்கட் செய்யப்பட்டாலும் அதற்கு அஸ்வின் தான் காரணம் என்பது போல் சமீபகாலங்களாக அவர் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இருப்பினும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது போல் தொடர்ந்து மன்கட் முறைக்கு அவர் ஆதரவாகவே பேசி வருகிறார். இந்நிலையில் அவரின் போராட்டத்திற்கு ஒரு வழியாக வெற்றி கிடைத்துள்ளது என்றே கூறலாம்.

- Advertisement -

ஆம் மன்கட் அவுட் செய்யும் முறையை சர்ச்சையின்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அவுட் என இன்று எம்சிசி அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளது. மேலும் அதுபோன்ற முறையில் ஒருவர் அவுட் செய்யப்பட்டால் இனிமேல் அது மன்கட் என அழைக்கக் கூடாது, மாறாக ரன்-அவுட் என்றுதான் அழைக்க வேண்டுமென எம்சிசி மிகவும் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் கிரிக்கெட் பந்துகளில் பந்துவீச்சாளர்கள் சலிவா பயன்படுத்துவது மற்றும் கேட்ச் பிடிக்கும் போது அடுத்து வரும் பேட்ஸ்மேன் அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளை எம்சிசி புதிதாக அறிவித்துள்ளது. அந்த புதிய விதிமுறைகள் இதோ:

Saliva Ban

1. 41.46 விதிமுறையில் இருந்த எதிர்ப்புறம் இருக்கும் பேட்டரை அவுட் செய்யும் முறை தற்போது 38வது விதிமுறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் பெயர் அதேபோலவே இருக்கும் (ரன்-அவுட்).

- Advertisement -

2. கரோனா காரணமாக தற்காலிகமாக பந்தில் சலிவாவை பயன்படுத்த பந்துவீச்சாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நிரந்தரமாக மாற்றப்பட்டுள்ளது.

3. இதுநாள் வரை கேட்ச் பிடிப்பதற்கு முன்பு எதிர்புறத்தில் இருந்த பேட்டர் பந்தை எதிர்கொள்ளும் இடத்திற்கு வந்து விட்டால் அடுத்து வரும் பேட்டர் எதிர்புறத்தில் களமிறங்கலாம். ஆனால் இனிமேல் கேட்ச் பிடித்து ஒரு பேட்டர் அவுட்டானாலும் கூட அடுத்து வரும் பேட்டர் எதிர் புறத்திற்கு செல்லாமல் நேரடியாக பந்தை எதிர்கொள்ளும் இடத்தில் களமிறங்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Runout

4. இத்துடன் பறவைகள், நாய்கள் போன்ற வெளிப்புற காரணிகளால் ஒரு பந்து தடை படும் பட்சத்தில் அது “டெட் பால்” என அம்பயர்களால் அறிவிக்கப்படும்.

5. ஒரு பந்து வீச்சாளர் பந்து வீசுவதற்கு முன்பாக அதை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேனை அவுட் செய்ய முயற்சித்தால் அது “டெட் பால்” என அறிவிக்கப்படும்.

6. இதற்கு முன்பு வரை ஒரு வெள்ளை கோட்டை பொறுத்தே வைட் பந்துகளை அம்பயர்கள் தீர்மானித்தனர். ஆனால் இனிமேல் ஒரு பேட்டர் எங்கு நிற்கிறார் என்பதை பொருத்து வெள்ளை கோட்டை வைத்து வைட் பந்துகளை தீர்மானிக்க புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

7. ஒரு சில நேரங்களில் பந்து வீச்சாளர்களின் கைநழுவி பந்து தவறான இடத்தில் வீசப்படும். அதுபோன்ற நேரங்களில் அந்தப் பந்து பிட்ச்க்குள் இருக்கும் பட்சத்தில் அதை ஒரு பேட்டர் அடித்து ரன்கள் எடுக்க முயற்சிக்கலாம். இருப்பினும் அந்த பந்து அதற்கு வெளியே இருக்கும் பட்சத்தில் அதை அம்பயர் டெட் பால் என அறிவிப்பார். அதேபோல் ஒரு பேட்டர் பிட்ச்க்கு வெளியே சென்று அடிக்கும் எந்த ஒரு பந்துகளும் டெட் பால் என அறிவிக்கப்படும்.

wide

8. இதுநாள் வரை பீல்டிங் செய்யும்போது பந்து வீசத் தொடங்கிய பின் மாற்றம் செய்யப்பட்டால் அதை டெட் பால் என அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் அதற்கு பதிலாக அதற்கு தண்டனை அளிக்கும் வண்ணமாக 5 ரன்கள் பெனால்டி வழங்கப்படும். இந்த விதிமுறைகள் அனைத்தும் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் நடைமுறைக்கு வர உள்ளது என எம்சிசி அறிவித்துள்ளது.

Advertisement