- Advertisement -
இந்திய கிரிக்கெட்

46க்கு அவுட்டாகியும் முன்னேறல.. இந்திய பேட்ஸ்மேன்கள் இதை செஞ்சாவே ரன்ஸ் வரும்.. பார்திவ் படேல் பேட்டி

பார்டர் – கவாஸ்கர் 2024 – 25 கிரிக்கெட் தொடர் 3 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. அடுத்ததாக நான்காவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்க உள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி தடுமாற்றமாக விளையாடுவதற்கு பேட்டிங் துறை சுமாராக விளையாடுவது முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

ஏனெனில் முதல் போட்டியில் ஆரம்பத்திலேயே 140க்கு இந்தியா அவுட்டாகும் அளவுக்கு பேட்ஸ்மேன்கள் சுமாராக விளையாடினார்கள். இருப்பினும் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்த அதிரடியால் 2வது இன்னிங்ஸ் ராகுல், ஜெய்ஸ்வால், கோலி பெரிய ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார்கள். ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் ராகுல் மட்டுமே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

இன்னும் முன்னேறல:

விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமாக பேட்டிங் செய்து இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 46க்கு ஆல் அவுட்டாகி இந்தியா அந்தத் தொடர் முழுவதுமே சுமாராக பேட்டிங் செய்ததாக பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார். ஆனால் அதிலிருந்து இன்னும் இந்திய பேட்ஸ்மேன்கள் முன்னேறவில்லை என்று அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையான பொறுமையுடன் கூடிய கட்டுப்பாட்டான ஆட்டத்தை இந்திய பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்தாததே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் அடிக்கடி சரிவு ஏற்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் இந்தியா சரிந்ததை பார்த்தோம்”

- Advertisement -

திறமை இருக்கு:

“ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பின்பும் அதே சரிவு தொடர்கிறது. இது அதிகப்படியான அழுத்தத்தின் கீழ் அதிரடியான ஆட்டத்தால் ஏற்படுகிறது என்று நான் நம்பவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையான கலாச்சாரம் மிக்க ஸ்டைலை மதித்து கட்டுப்பாட்டுடன் பேட்டிங் செய்த போதெல்லாம் இதே இந்திய பேட்ஸ்மேன்கள் கடந்த காலங்களில் அசத்தியுள்ளார்கள்”

இதையும் படிங்க: விராட் கோலியை தனது குட்டி மகனுக்கு வேற லெவலில் அறிமுகப்படுத்திய ஆஸ்திரேலிய அப்பா.. வைரல் பதிவு

“எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களுக்கு தாங்களே அனுமதித்து விளையாட வேண்டும். ஏனெனில் அவர்களிடம் திறன் இருக்கிறது. எனவே அவர்கள் கட்டுப்பாட்டுடன் பேட்டிங் செய்தால் எங்கு வேண்டுமானாலும் அசத்த முடியும்” என்று கூறினார். அவர் கூறுவது போல முதல் போட்டியில் கட்டுப்பாட்டுடன் வெளியேறிய காரணத்தாலேயே இந்தியா 487-6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -