விராட் கோலியை தனது குட்டி மகனுக்கு வேற லெவலில் அறிமுகப்படுத்திய ஆஸ்திரேலிய அப்பா.. வைரல் பதிவு

AUS Fan
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் அந்தத் தொடரின் நான்காவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்குகிறது. அந்தப் போட்டியில் வெல்வதற்காக இந்திய அணியினர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள அந்தப் போட்டியில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது. அப்போட்டியில் அசத்துவதற்காக விராட் கோலி வலைப்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதை உள்ளூர் ஆஸ்திரேலிய ரசிகர்கள் நேரடியாக பார்க்கும் வாய்ப்பை பெற்றனர்.

- Advertisement -

ஆஸி தந்தை – மகன்:

அப்போது ஒரு ஆஸ்திரேலிய தந்தை தன்னுடைய குட்டி மகனுக்கு விராட் கோலியை அறிமுகப்படுத்தியது பின்வருமாறு. “ஜேமி (மகனுடைய பெயர்) அங்கே பார். இந்த வரிசையின் கடைசியில் 4வது பேட்ஸ்மேனை நீ பார்க்கிறாயா? அவருடைய பெயர் விராட் கோலி. அவர் தான் இந்த மொத்த உலகிலும் மிகவும் சிறந்த பேட்ஸ்மேன்” என்று கூறுகிறார். அதைக் கேட்டு அந்த சின்ன குழந்தையும் விராட் கோலி பயிற்சி எடுப்பதை பார்க்கிறது.

இந்த அற்புதமான தருணத்தை அருகில் இருந்த ஒரு இந்திய ரசிகர் வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2008 முதல் விளையாடி வரும் விராட் கோலி 26000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து 81 சதங்கள் அடித்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருகிறார். அதனால் நவீன கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேனாகவும் அவர் போற்றப்படுகிறார்.

- Advertisement -

மீண்டும் அசத்துவாரா கிங்:

குறிப்பாக சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அவர் 7 சதங்கள் அடித்துள்ளார். அதனால் ஆஸ்திரேலியாவில் அதிக சதங்கள் அடித்த ஆசிய பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையையும் இத்தொடரின் முதல் போட்டியில் விராட் கோலி படைத்தார். அது போக மொத்தமாக ஆஸ்திரேலிய மண்ணில் அவர் 10 சர்வதேச சதங்களையும் அடித்துள்ளார்.

இதையும் படிங்க: பாக்ஸிங் டே நாயகனாக.. சச்சின் போன்ற எந்த இந்தியரும் செய்யாத சாதனையை ராகுல் நிகழ்த்துவரா?

அப்படிப்பட்ட திறமையும் தரமும் கொண்ட விராட் கோலி கடந்த 2 போட்டிகளில் சுமாராக விளையாடியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதனால் 4வது போட்டியில் சிறப்பாக விளையாடி அவர் இந்திய அணியின் வெற்றிக்கு பங்காற்ற தயாராகி வருகிறார். குறிப்பாக 2014ஆம் ஆண்டு மெல்போர்ன் மைதானத்தில் 169 ரன்கள் குவித்ததைப் போன்ற ஆட்டத்தை இம்முறையும் வெளிப்படுத்த அவர் போராட உள்ளார்.

Advertisement