WTCFinal : ரோஹித்தை விடுங்க.. அஷ்வினின் நீக்கம் குறித்து பவுலிங் கோச் – என்ன சொல்லியிருக்காரு பாருங்க

Paras-and-Ashwin
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (ஜூன் 7-ஆம் தேதி) டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியானது லண்டன் ஓவல் மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டதை கைப்பற்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அதன்படி நேற்று துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Rohit

- Advertisement -

அதன்படி நேற்று தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த பின்னர் அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசினார்.

அப்போது இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடனே களமிறங்கும் என்றும் அந்த ஒரு சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா தான் என்று அறிவித்தார். இப்படி ரோகித் சர்மா அறிவித்ததற்கு பிறகு அஸ்வின் இந்திய அணியில் சேர்க்கப்படாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் தொடர்ச்சியாக சமூகவலைதளம் மூலம் எழுந்து வருகின்றன. மேலும் அஸ்வினை சேர்க்காமல் ரோகித் சர்மா தவறு செய்து விட்டார் என்கிற அடிப்படையில் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

Ashwin

இந்நிலையில் இந்த போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரஸ் ஹம்ப்ரே தெளிவான விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : அஷ்வின் போன்ற ஒரு சாம்பியன் பவுலரை அணியில் இருந்து நீக்குவது என்பது ஒரு கடினமான முடிவு தான் ஆனாலும் ஒரு சில சமயங்களில் நாம் இதுபோன்ற தைரியமான முடிவை எடுத்துதான் ஆக வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் இந்த போட்டியில் நாங்கள் களத்தில் தன்மை, வானிலை மற்றும் சூழ்நிலை என அனைத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. அந்த வகையில் போட்டி துவங்கும் முன்னர் வரை நாங்கள் செய்த ஆலோசனைக்குப் பிறகு கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் இருந்தால் இந்த போட்டியில் சாதகமாக இருக்கும் என்று நினைத்தோம். கடந்த காலங்களிலும் எங்களது இந்த முடிவு சாதகமாக இருந்திருக்கிறது.

இதையும் படிங்க : WTCFinal : டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் முதல் வீரராக மகத்தான சாதனையை நிகழ்த்திய – டிராவிஸ் ஹெட்

கடந்த காலங்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் நமது அணிக்காக சிறப்பாக செயல்பட்டு உள்ளார்கள். இந்த போட்டியில் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து நாங்கள் இதுபோன்ற ஒரு கடினமான முடிவை தைரியமாக எடுத்து தான் ஆக வேண்டும் என அஸ்வினின் நீக்கம் குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரஸ் ஹம்ப்ரே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement