வங்கதேச போட்டியில் அஸ்வின் விளையாடுவாரா? பிளேயிங் லெவனில் மாற்றம் நிகழுமா? பவுலிங் கோச் பேட்டி

Paras mhambrey
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் விளையாடி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 3 போட்டிகளில் அடுத்தடுத்த 3 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இத்தொடரின் முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக போராடி வென்ற இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடியால் எளிதாக வென்றது.

அதே வேகத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான 3வது போட்டியிலும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் அசத்திய இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றி பெற்றது. அதனால் உலகக் கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து தங்களுடைய வெற்றி சரித்திரத்தை தக்க வைத்த இந்தியா அடுத்ததாக அக்டோபர் 19ஆம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

- Advertisement -

மாற்றம் இருக்குமா:
கடந்த சில நாட்களில் ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகள் இங்கிலாந்து, தென்னாபிரிக்காவை தோற்கடித்து ஆச்சரியத்தை கொடுத்ததால் போட்டியில் கவனத்துடன் வங்கதேசத்தை எதிர்கொண்டு வெற்றி பெறும் முனைப்புடன் இந்தியா தயாராகியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் அஸ்வின் விளையாடுவாரா என்ற கேள்விக்கு வெற்றி நடை போட்டு வரும் தங்களுடைய 11 பேர் அணியில் மாற்றங்கள் இருக்காது என்று பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே பதிலளித்துள்ளார்.

குறிப்பாக அஸ்வின், ஷமி, சூரியகுமார் யாதவ் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அணியின் நலனுக்காக அதை பற்றி கவலையும் பட மாட்டார்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டிக்கும் முன்பாக பேசியது பின்வருமாறு. “அஸ்வின் போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர் இருந்தும் அவருக்கு உங்களால் வாய்ப்பு கொடுக்க முடியாதது மிகவும் கடினமான முடிவாகும். இருப்பினும் அணியின் நலனுக்காக இது போன்ற கடினமான முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டும்”

- Advertisement -

“அத்துடன் இந்த முடிவுகள் அனைத்தும் வீரர்களிடம் பேசப்பட்ட பின்பே எடுக்கப்படுகிறது. குறிப்பாக மைதானத்திற்கு தகுந்த அணியை நாங்கள் தேர்வு செய்கிறோம். எனவே அணி நலனை விரும்பும் அஸ்வின் போன்றவர் இதற்காக எப்போதும் கவலைப்பட்டதாக நான் பார்த்ததில்லை. மேலும் அவரைப் போன்றவர் எங்களுடைய அணியில் இருப்பது நிறைய உதவியாக இருக்கிறது. அதே போல ஷமியை தேர்வு செய்யாததும் உண்மையாகவே கடினமான முடிவாகும்”

இதையும் படிங்க: வங்கதேச அணிக்கெதிரான நாளைய ட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

“ஆனால் மைதானத்திற்கு எம்மாதிரியான அணி தேவை என்பதைப் பொறுத்தே நாங்கள் தேர்வு செய்கிறோம். இதற்காக அவரிடம் நாங்கள் தெளிவாக பேசியுள்ளோம். குறிப்பாக அவர் புதிய பந்திலும் டெத் ஓவர்களிலும் எங்களுக்கு சிறப்பாக செயல்படக் கூடியவர். ஆனாலும் களத்தில் 11 பேர் மட்டுமே நீங்கள் விளையாட வைக்க முடியும் என்பதால் இது போன்ற சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. மேலும் இந்தியா தங்களுடைய வெற்றி அணியை மாற்றாது” என்று கூறினார்.

Advertisement