வங்கதேச அணிக்கெதிரான நாளைய ட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

IND-vs-BAN
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தாங்கள் பங்கேற்ற முதல் மூன்று போட்டிகளிலும் அட்டகாசமான வெற்றியை பெற்று தற்போது புள்ளி பட்டியலில் 6 புள்ளிகள் உடன் முதலிடத்தில் உள்ளது. இனிவரும் ஆறு போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும்.

இவ்வேளையில் இந்திய அணியானது அடுத்ததாக அக்டோபர் 19-ஆம் தேதி நாளை வங்கதேச அணிக்கு எதிரான 17-ஆவது லீக் போட்டியில் புனே மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ந்து நான்கு வெற்றிகளை பெறுவதோடு மட்டுமின்றி 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும்.

- Advertisement -

அதே வேளையில் ஏற்கனவே இந்து தொடரில் மூன்று போட்டியில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள பங்களாதேஷ் தங்களது அடுத்த வெற்றிக்காக போராடும். இதன் காரணமாக நாளை நடைபெறவுள்ள இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான ஒன்றாக உள்ளது. இதனால் இந்த போட்டியின் மீதான சுவாரசியமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாளைய பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்த உத்தேச பட்டியலை தான் நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம். அதன்படி ஏற்கனவே கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய அதே அணி தான் இந்த போட்டியில் விளையாடும் என்றும் அந்த பெரிய அளவில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என்று தெரிகிறது.

- Advertisement -

கடந்த போட்டியில் கிடைத்த முமென்ட்டத்தை அப்படியே கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இந்திய அணி அதே பிளேயிங் லெவனுடன் தான் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புனே மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதனால் கூடுதல் சுழற்பந்து வீச்சாளர் தேவைப்படாது என்பதாலும் அஸ்வின் இந்த போட்டியிலும் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. அதன்படி நாளைய வங்கதேச அணிக்கெதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : 109/1 டூ 110/4.. இங்கிலாந்து போல நியூஸிலாந்தை சாய்க்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட ஆப்கானிஸ்தான்?

1) சுப்மன் கில், 2) ரோஹித் சர்மா, 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஷர்துல் தாகூர், 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement