109/1 டூ 110/4.. இங்கிலாந்து போல நியூஸிலாந்தை சாய்க்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட ஆப்கானிஸ்தான்?

NZ vs AFG
- Advertisement -

இந்தியாவில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 18ஆம் தேதி மதியம் 2 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற 16வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதில் கடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்த ஆப்கானிஸ்தான் முதலில் டாஸ் வென்று பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு துவக்க வீரர் டேவோன் கான்வே 20 (18) ரன்களில் முஜீப் சுழலில் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த ரச்சின் ரவீந்தரா மறுபுறம் நிதானமாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் வில் எங்குடன் சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அந்த வகையில் 21 ஓவர்கள் வரை நிலைத்து நின்ற இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது.

- Advertisement -

தவறியதா வாய்ப்பு:
ஆனால் அப்போது ரச்சினை 32 ரன்களில் அவுட்டாக்கிய ஓமர்சாய் அதே ஓவரில் மறுபுறம் சவாலை கொடுத்த பில் எங்கயும் 54 ரன்களில் அவுட்டாக்கி அசத்தினார். அப்போது வந்த டார்ல் மிட்சேல் 1 ரன்னில் ரசித் கான் சுழலில் சிக்கியதால் 109/1 என நல்ல நிலையில் இருந்த நியூசிலாந்து திடீரென 110/4 என்று சரிந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த கேப்டன் டாம் லாதம் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் நங்கூரத்தை போட்டு சரிவை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் ஆப்கானிஸ்தான் பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்த இந்த ஜோடி 48 ஓவர்கள் வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நியூசிலாந்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தது. ஒரு வழியாக அந்த ஜோடியில் பிலிப்ஸை 71 (80) ரன்களில் அவுட்டாக்கிய நவீன்-உல்-ஹக் அதே ஓவரில் மறுபுறம் அசத்திய டாம் லாதமையும் 68 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார்.

- Advertisement -

இறுதியில் மார்க் சேப்மேன் அதிரடியாக 25* (12) ரன்கள் எடுத்ததால் 50 ஓவர்களில் நியூசிலாந்து 288/6 என்ற நல்ல ஸ்கோரை எடுத்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஓமர்சாய், நவீன்-உல்-ஹக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இருப்பினும் இப்போட்டியின் ஆரம்பத்திலேயே வில் எங் 10 ரன்களுக்குள் கொடுத்த எளிதான கேட்ச்சை ஆப்கானிஸ்தான் தவற விட்டது.

இதையும் படிங்க: இந்தியாவை மட்டும் தோற்கடிங்க.. அதை செய்றேன்.. வங்கதேச வாலிபர்களுக்கு பாகிஸ்தான் நடிகை உறுதி

அதே போல டெத் ஓவர்களில் கிளன் பிலிப்ஸ் கொடுத்த ஒரு கேட்ச்சையும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் தவற விட்டார்கள். ஒருவேளை அவற்றை சரியாக பிடித்திருந்தால் நியூசிலாந்தை கண்டிப்பாக 230 – 250 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி கடந்த போட்டியில் இங்கிலாந்து சாய்த்தது போல வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உருவாகியிருக்கும். இருப்பினும் அதை தவற விட்டு ஆப்கானிஸ்தான் இப்போட்டியில் வெற்றி பெறுவதும் கடினமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதுடன் நியூசிலாந்து பவுலிங் தரமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement