இந்தியாவை மட்டும் தோற்கடிங்க.. அதை செய்றேன்.. வங்கதேச வாலிபர்களுக்கு பாகிஸ்தான் நடிகை உறுதி

PAkistan Actress
- Advertisement -

ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 3 போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக முதல் போட்டியிலேயே வலுவான ஆஸ்திரேலியாவை 2/3 என சரிந்தும் விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இந்தியா போராடி தோற்கடித்தது.

அதை தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியில் ஆப்கானிஸ்தானை ரோகித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தால் எளிதாக வென்ற இந்தியா அகமதாபாத் நகரத்தில் நடைபெற்ற 3வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை பந்தாடி அட்டகாசமான வெற்றியை பதிவு செய்தது. அதிலும் குறிப்பாக 191 ரன்களுக்கு பாகிஸ்தானை சுருட்டிய இந்தியா உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக வென்று தங்களுடைய வெற்றி சரித்திரத்தை தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

பாகிஸ்தான் நடிகையின் உறுதி:
மறுபுறம் 154/2 என்ற நல்ல துவக்கத்தை பெற்றும் அதன் பின் சீட்டுக்கட்டு போல சரிந்து 191 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த நிலையில் இந்தியா தங்களுடைய வெற்றி பயணத்தில் அடுத்ததாக அக்டோபர் 19ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெறும் 4வது போட்டியில் வங்கதேசத்தை மதியம் 2 மணிக்கு சந்திக்கிறது.

சாதாரணமாகவே 2016 டி20 உலகக்கோப்பை, 2018 நிதிஹாஸ் கோப்பை போன்ற தொடர்களில் தோல்வியின் பிடியில் சிக்கியும் மீண்டெழுந்து வென்ற இந்தியா இம்முறையும் வங்கதேசத்தை தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்த உலகக் கோப்பையில் கத்துக் குட்டிகளாக கருதப்படும் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் கடந்த சில நாட்களில் வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து ஆச்சரியத்தை கொடுத்தன.

- Advertisement -

எனவே 2007 உலகக்கோப்பை போன்ற சம்பவத்தை மீண்டும் வங்கதேசத்தை செய்யவிடாமல் இந்தியா இம்முறை கவனத்துடன் மதிப்பு கொடுத்து விளையாடி வெற்றிக்கான முனைப்புடன் களமிறங்க உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்தியாவை இப்போட்டியில் வங்கதேசம் தோற்கடித்தால் வங்கதேசத்திற்கு சென்று அங்குள்ள பெங்காலிபையனுடன் டேட்டிங் செய்ய உள்ளதாக பாகிஸ்தான் நடிகை சேஹர் சின்வாரி ட்விட்டரில் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

PAkistan Actress 2

அதாவது தங்களுக்கு தோல்வியை பரிசளித்த இந்தியாவுக்கு வங்கதேசம் அவமான தோல்வியை பரிசளித்தால் டேட்டில் செய்ய தயார் என்று வங்கதேச வாலிபர்களை சூடேற்றம் வகையில் தம்முடைய ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “அடுத்த போட்டியில் பெங்காலி பந்து எங்களுக்காக அவர்களை பழி வாங்குவார். அவர்களின் அணி இந்தியாவை வெல்ல முடிந்தால் நான் தாக்காவுக்கு சென்று ஒரு பெங்காலி பையனுடன் மீன் விருந்து சாப்பிட்டு டேட்டிங் செய்வேன்” என்று பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

Advertisement