- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலி சொன்னது உண்மை தான்.. அவரோட பாராட்டு எனக்கு வேண்டாம்.. பராஸ் மாம்ப்ரே பேட்டி

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்கள் கழித்து வென்று சாதனை படைத்தது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் ரோகித் சர்மா தலைமையில் அசத்திய இந்தியா தோல்வியே சந்திக்காமல் சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வெற்றிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, விராட் கோலி உள்ளிட்ட அனைவருமே முக்கிய பங்காற்றினர்.

இருப்பினும் ஃபைனலில் கடைசி 30 பந்துகளில் தென்னாப்பிரிக்காவுக்கு 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது இந்தியா மீண்டும் தோற்கும் என்று நினைத்ததாக விராட் கோலி கூறியிருந்தார். ஆனால் அப்போது 16, 18வது ஓவரை வீசிய ஜஸ்ப்ரித் பும்ரா 6 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்து வெற்றியை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார். அதைப் பயன்படுத்திய அர்ஷ்தீப் சிங், ஹர்டிக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர்.

- Advertisement -

வேற லெவல் பும்ரா:
அப்படியே கடைசி ஓவரில் டேவிட் மில்லர் கொடுத்த கேட்ச்சை சூரியகுமார் அபாரமாக பிடித்ததால் இந்தியா வெற்றி கண்டது. அந்த வகையில் கை நழுவிச்சென்ற கோப்பையை மீண்டும் பெற்றுக்கொடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய பவுலர் என்று விராட் கோலி சமீபத்தில் பாராட்டியிருந்தார். மேலும் உலகின் 8வது அதிசயமான பும்ரா இந்தியாவுக்காக விளையாட அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்றும் விராட் கோலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விராட் கோலி சொல்வது போல ஜஸ்ப்ரித் பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய பவுலர் என்று 2024 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பும்ராவுக்கு சொல்லிக் கொடுக்க பெரிதாக ஒன்றுமில்லை. வேண்டுமானால் அவருடன் பவுலிங் பயிற்சியாளராக நான் விரும்பி வேலை செய்தேன் என்று சொல்லலாம்”

- Advertisement -

“பும்ரா நன்றாக செயல்படுவதற்கான பாராட்டுகளை நான் எடுத்துக் கொள்வதை விட சிறந்த விஷயம் இருக்க முடியுமா? ஆனால் நான் அந்த பாராட்டை எடுத்துக் கொள்ள மாட்டேன். ஏற்கனவே சொன்னது போல அவர் தலைமுறையில் ஒரு முறை மட்டுமே வரக்கூடிய பவுலர். இந்தியா நிறைய பவுலர்களை உருவாக்கியுள்ளது. ஆனால் பும்ரா 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தக்கூடிய தலைமுறையின் ஒரு பவுலர்”

இதையும் படிங்க: இதெல்லாம் செய்ஞ்சா டீம்ல இருக்கவே மாட்டீங்க.. இந்திய வீரர்களுக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்டுள்ள – கவுதம் கம்பீர்

“டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய எந்த வகையான கிரிக்கெட்டிலும் அவர் நம்பர் ஒன். அற்புதமான நுணுக்கங்களை கொண்டுள்ள அவரிடம் எப்படி பந்து வீச வேண்டும் என்பதற்கான திட்டங்கள் இருப்பதை பும்ராவிடம் பேசும் போது தெரிந்து கொண்டேன். சூழ்நிலையை உணர்ந்து செயல்படும் அவருக்கு பேட்ஸ்மேன்கள் எப்போது தம்மிடம் தடுமாறுகிறார்கள் என்பது தெரிகிறது” என்று கூறினார்.

- Advertisement -