இதெல்லாம் செய்ஞ்சா டீம்ல இருக்கவே மாட்டீங்க.. இந்திய வீரர்களுக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்டுள்ள – கவுதம் கம்பீர்

Gambhir
- Advertisement -

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன் தனது பதவியில் இருந்து வெளியேறியதால் புதிய தலைமை பயிற்சியாளராக பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து ஐசிசி தொடர்களை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

அதேபோன்று ஏற்கனவே பல்வேறு அனுபவங்களை கொண்ட கௌதம் கம்பீர் இந்திய அணிக்குள் பல கெடுபடியான விதிமுறைகளைக் கொண்டு வந்து மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தனித்தனி அணியை உருவாக்கி வெற்றி காண வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியில் இனி இடம்பெறப்போகும் வீரர்கள் தொடர்ந்து வாய்ப்பினை பெற என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்தும் சில கடுமையான ஆலோசனைகளை தற்போது வீரர்களுக்காக வழங்கி உள்ளார். அந்த வகையில் கௌதம் கம்பீர் கூறியதாவது : ஒரு தொழில் முறை வீரருக்கு காயம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஒரு வீரர் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் போது காயம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

ஒரு சில வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அவர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு வீரர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்றால் அவர் காயத்திலிருந்து மீண்டு இருக்க வேண்டும். நீங்கள் ஒரு முழுமையான வீரராக செயல்படும்போது உங்களுடைய அனைத்தையும் போட்டிக்காக கொடுக்க வேண்டும்.

- Advertisement -

நான் எனது பேட்டை எடுத்தால் போட்டியின் முடிவின் மீது கவனம் செலுத்த மாட்டேன். உண்மையாக மைதானத்தில் களமிறங்கி ஆடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். அப்படி நாம் நாம் செய்யும் வேலைக்கு உண்மையாக இருந்தால் முடிவுகள் நம் பின்னே வரும். அணியின் வெற்றிக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்ய வேண்டும். தனிநபர் ஆட்டத்திற்காக சுயநலமாக இருந்தால் அது வேலைக்காகாது.

இதையும் படிங்க : பிசிசிஐ ஹெல்ப் செய்யலன்னா என்ன.. நான் என்னோட பென்ஷனை தரேன்.. சக வீரருக்காக கபில் தேவ் கோரிக்கை

ஒரு அணியாக நாம் அனைவரும் பங்களித்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அந்த வகையில் இந்திய அணி இனி ஒரு முழுமையான அணியாக விளையாட வேண்டும். தனிநபர் சாதனைகளுக்காக விளையாடாமல் அணியின் முடிவிற்காக விளையாட வேண்டும். அதேபோன்று காயம் ஏற்பட்டு விடுமோ என்று தயங்கி தயங்கி பீல்டிங் செய்வதோ, பயந்து பயந்து விளையாடுவதோ இருந்தால் அணியில் இடம் இருக்காது என்று கௌதம் கம்பீர் கடுமையான கருத்தினை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement