பிசிசிஐ ஹெல்ப் செய்யலன்னா என்ன.. நான் என்னோட பென்ஷனை தரேன்.. சக வீரருக்காக கபில் தேவ் கோரிக்கை

Kapil Dev
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட் தற்சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்காக அவர் 12 வருடங்களில் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பெருமையை கொண்டவர். மேலும் 1990களின் இறுதியில் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டார். அவருடைய வழி காட்டுதலில் சார்ஜாவில் நடைபெற்ற கோகோ-கோலா கோப்பையை இந்தியா வென்றதை மறக்க முடியாது.

அத்துடன் ஓய்வுக்கு பின் பிசிசிஐ நிர்வாகத்தில் அவர் முக்கிய பொறுப்பிலும் இருந்தார். தற்போது 71 வயதாகும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வருகிறார். எனவே தமக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்யுமாறு அவருடைய சார்பில் பிசிசிஐக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு பிசிசிஐ இதுவரை செவிசாய்க்கவில்லை.

- Advertisement -

கபில் தேவ் உருக்கம்:
அதனால் ஏமாற்றமடைந்த முன்னாள் ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் தம்முடைய பென்சன் தொகையை தனது நண்பன் மற்றும் சக வீரரானஅனுஸ்மானுக்கு கொடுப்பதாக அறிவித்துள்ளார். அத்துடன் சுனில் கவாஸ்கர், திலிப் வெங்சர்க்கார், போன்ற தமது தலைமையில் விளையாடிய வீரர்களும் அவர்களுடைய குடும்பம் சம்மதித்தால் தங்களது பென்சன் தொகையை மருத்துவ உதவிக்கு கொடுக்கலாம் என கபில் தேவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது மிகவும் சோகத்தையும் வலியையும் கொடுக்கிறது. ஏனெனில் நான் அனுசுடன் இணைந்து விளையாடியுள்ளேன். அவரை இந்த நிலைமையில் என்னால் பார்க்க முடியவில்லை. யாரும் இப்படி இருக்கக்கூடாது. வாரியம் அவரை பார்த்துக்கொள்ளும் என்பது எனக்கு தெரியும். இருப்பினும் யாரையும் நாங்கள் இங்கு கட்டாயப்படுத்தவில்லை”

- Advertisement -

“அவருக்கு தேவையான எந்த உதவியும் இதயத்திலிருந்து வர வேண்டும். அவர் சில அதிரடியான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தனது முகத்திலும் மார்பிலும் அடி வாங்கி இந்தியாவுக்கு விளையாடினார். எனவே இது அவருக்காக நாம் நிற்க வேண்டிய நேரம். ரசிகர்கள் அவரை விட மாட்டார்கள் என்று நம்புகிறேன். அவருக்காக ரசிகர்கள் பிரார்த்திக்க வேண்டும்”

“அந்த காலத்தில் வாரியத்திடம் போதுமான பணம் இல்லை. ஆனால் இப்போது தேவையான பணம் இருக்கிறது. அதனால் அவர்கள் அறக்கட்டளை உருவாக்கி முன்னாள் வீரர்களை கவனித்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் அதை செய்யவில்லை. எனவே பிசிசிஐ ஒரு அறக்கட்டளை துவங்கி தங்களது முன்னாள் இந்நாள் வீரர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: 2007 டி20 உ.கோ ஃபைனல் ரிப்பீட்டாகுமா.. இந்தியா – பாகிஸ்தான் சாம்பியன்ஸ் எந்த சேனலில் பார்க்கலாம்?

“எனது பென்ஷன் தொகையை கொடுக்க தயாராக இருக்கிறேன். மற்ற வீரர்களின் குடும்பமும் அனுமதித்தால் கொடுக்கலாம்” என்று கூறினார். இந்த செய்தியை கேட்டு இந்திய ரசிகர்களும் முன்னாள் வீரரான அனுஸ்மான் விரைவில் குணமடைய வேண்டும் என சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் பிரார்த்தனையும் தெரிவிப்பது குறிப்பிட்டத்தக்கது.

Advertisement