அவங்கள தூக்குனா ஆட்டம் க்ளோஸ், மாலையில் அறிமுகமான பிளேயர்ஸை கொண்ட இந்தியாவ ஈஸியா பாக் தோற்கடிக்கும் – சல்மான் பட் மாஸ் பேட்டி

Salman Butt
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்கியது. விரைவில் இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 50 ஓவர் போட்டிகளாக நடக்கும் இத்தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி மோதும் போட்டிக்கு உச்சகட்டமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதில் உலக கோப்பைக்கு முன்னோட்டமாக பாகிஸ்தானை இங்கேயே தோற்கடித்து இந்தியா வெற்றி வாகை சூடுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது.

மறுபுறம் காயங்கள் மற்றும் மாற்றங்களால் திணறும் இந்தியாவை செட்டிலாகியுள்ள பாகிஸ்தான் தோற்கடிக்கும் என அந்நாட்டு முன்னாள் வீரர்கள் சவால் விட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் கேப்டன் சல்மான் பட் இந்திய அணி பெரும்பாலும் காயமடைந்த வீரர்களால் தடுமாற்றமாக இருப்பதாக கூறியுள்ளார். அதனால் தங்களுடைய தரமான பவுலர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரை முன்கூட்டியே அவுட்டாக்கினால் இந்தியாவின் ஆட்டம் முடிந்து விடும் என்றும் அவர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பாகிஸ்தான் வெல்லும்:
அதை விட காலையில் ஐபிஎல் தொடரில் விளையாடி மாலையில் சர்வதேச அளவில் விளையாடிய வீரர்களை இந்தியா கொண்டிருப்பதாக தெரிவிக்கும் அவர் அதை பயன்படுத்தி நிச்சயம் பாகிஸ்தான் வெல்லும் என்று உறுதிப்பட பேசியுள்ளார். இதை பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை பார்க்கும் போது அதில் ஃபிட்னஸ் கவலையை ஏற்படுத்துகிறது. அவர்களுடைய அணியில் நீண்டகாலமாக சில வீரர்கள் உடல் தகுதியற்றவர்களாக உள்ளனர்”

“எனவே அவர்கள் உடையக்கூடியவர்களா அல்லது முழு வீச்சில் பந்து வீசுபவர்களாக என்பது நமக்கு தெரியாது. மேலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை தவிர்த்து அவர்களுடைய அணியில் இருக்கும் எஞ்சிய வீரர்கள் நிறைய போட்டியில் விளையாடியிருந்தாலும் போதிய அனுபவமில்லாமல் இருக்கின்றனர். அதனாலயே ரோஹித் மற்றும் விராட் ஆகியோர் அபார விளையாடினால் மட்டுமே இந்தியா வெற்றி காண்கிறது. அவர்கள் தடுமாறினால் இந்தியாவும் தடுமாறுகிறது”

- Advertisement -

“மறுபுறம் பாபர் ரிஸ்வான், ஃபகார் ஷடாப், ஷாஹின், ஹரிஷ் ரவூப் போன்றவர்களால் பாகிஸ்தானின் ஆணிவேர் வலுவாக இருப்பதாக எனது பார்வையில் தெரிகிறது. இந்திய அணியிலும் ஜடேஜா, ஷமி, பும்ரா, விராட், ரோஹித் போன்ற மேட்ச் வின்னர்கள் இருக்கின்றனர். ஆனால் பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகள் எடுத்தால் தங்களை நிரூபிக்கும் அளவுக்கு அவர்களுடைய பேட்டிங் சுமாராகவே இருக்கிறது. சமீப காலங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர்கள் தங்களுடைய சொந்த செயல்பாடுகளால் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை”

இதையும் படிங்க: வீடியோ : இந்தாங்க ஃப்ரீ விக்கெட், நேபாளுக்கு விக்கெட்டை பரிசளித்த ரிஸ்வான் – கடுப்பாகி தொப்பியை வீசிய பாபர் அசாம்

“அத்துடன் ஐபிஎல் தொடரில் விளையாடியிருந்தாலும் பாகிஸ்தானுக்கு எதிரான உச்சகட்ட அழுத்தம் கொண்ட போட்டியில் அசத்தும் அளவுக்கு இந்திய அணி வீரர்களிடம் போதுமான அனுபவமில்லை. குறிப்பாக காலையில் ஐபிஎல் தொடரில் விளையாடி மாலையில் இந்திய அணியில் விளையாடும் சில வீரர்களுக்கு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருக்கும் அழுத்தம் தெரியாது. மேலும் இந்தியா மீது அதிகப்படியான எதிர்பார்ப்பும் இருப்பதும் எக்ஸ்ட்ரா அழுத்தத்தை உருவாக்கும்” என்று கூறினார்.

Advertisement