- Advertisement -
உலக கிரிக்கெட்

டெஸ்ட் வரலாற்றிலேயே இதைவிட மோசமான தோல்வி இருக்க முடியாது.. பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்ட அவமானம்

வங்கதேச அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு மேல் குவித்து டிக்ளேர் செய்தும் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்துள்ளது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதோடு பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்படி ஒரு மோசமான தோல்வியை அவர்கள் சந்தித்ததில்லை என்றும் அவர்களது மோசமான டெஸ்ட் போட்டியாக இந்த போட்டி மாறியுள்ளது குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மோசமான வரலாற்று தோல்வி :

- Advertisement -

அந்த வகையில் ஒரே மைதானத்தில் அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு மேல் குவித்தும் அந்த போட்டியை தோல்வியை சந்தித்துள்ளது வருத்தத்திற்குரிய விடயமாக மாறியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே இதே ராவல்பிண்டி மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த போட்டியின் போது முதலில் இன்னிங்சில் 579 ரன்கள் பாகிஸ்தான அணி குவிக்க அந்த போட்டியில் பாகிஸ்தான அணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின்போது இங்கிலாந்து அணி அபாரமாக பந்துவீசி அவர்களை வீழ்த்தி அந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. அதேபோன்று தற்போது வங்கதேச அணிக்கு எதிரான இந்த போட்டியிலும் முதலில் இன்னிங்சில் 400 ரன்களுக்கு மேல் பாகிஸ்தான் அணி குவித்தும் இரண்டாவது இன்னிங்சில் சொற்ப ரன்களில் ஆல் அவுட்டாகி இப்படி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி கத்துக்குட்டி அணியான வங்கதேச அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது மோசமான சாதனையாக மாறி உள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணியை சொந்த மண்ணில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையை வங்கதேச அணி தற்போது பெற்றுள்ளது. அது மட்டுமின்றி கடந்த 1294 நாட்களாக பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.

இந்த இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தான் அணி ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் அவர்களது சொந்த மண்ணில் விளையாடியிருந்தாலும் அதில் ஒரு டெஸ்டில் கூட வெற்றி பெறவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர்களில் விளையாடிய பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் டெஸ்ட் தொடரை அவர்களிடம் இழந்திருந்தது.

இதையும் படிங்க : அன்னைக்கு இந்தியாவிடம் வாங்கிய அடியிலிருந்து.. இன்னும் பாகிஸ்தான் எழுந்திருக்கல.. ரமீஸ் ராஜா வேதனை

அதனை தொடர்ந்து தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியிலும் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளதால் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்துடன் உள்ளது. ஒருவேளை அந்த போட்டியில் தோல்வியோ அல்லது டிராவோ அடைந்தால் மீண்டும் ஒருமுறை சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்கும் அபாயத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -