அன்னைக்கு இந்தியாவிடம் வாங்கிய அடியிலிருந்து.. இன்னும் பாகிஸ்தான் எழுந்திருக்கல.. ரமீஸ் ராஜா வேதனை

- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று வங்கதேசம் புதிய சாதனை படைத்தது. அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற முதல் அணியாகவும் வங்கதேசம் உலக சாதனை படைத்தது.

மறுபுறம் வங்கதேசத்தை குறைத்து மதிப்பிட்ட பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 448-6 ரன்களுக்கு தைரியமாக டிக்ளேர் செய்தது. ஆனால் 2வது இன்னிங்ஸில் மோசமாக விளையாடிய அந்த அணி வெறும் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் வங்கதேசத்துக்கு எதிராக தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த பாகிஸ்தான் முதல் முறையாக அவமானத் தோல்வியையும் சந்தித்தது.

- Advertisement -

இந்தியாவிடம் வாங்கிய அடி:

அதனால் அந்நாட்டு முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பாகிஸ்தான அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2023 ஆசிய கோப்பையில் இந்தியாவிடம் வாங்கிய அடியிலிருந்து இன்னும் பாகிஸ்தான் எழுதிருக்கவில்லை என முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா வேதனை தெரிவித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“முதலில் அணி தேர்விலேயே தவறு இருக்கிறது. நீங்கள் ஸ்பின்னர் இல்லாமலேயே விளையாடினீர்கள். இரண்டாவதாக நட்சத்திர அந்தஸ்தை கொண்ட நம்முடைய முடிந்து போன வேகப்பந்து வீச்சாளர்களை சார்ந்திருப்பது தவறானதாகும். இந்த தோல்வி, ஒரு வகையான நம்பிக்கை நெருக்கடி ஆகியவை கடந்த ஆசிய கோப்பையின் போது இந்தியாவிடம் நமது வேகப்பந்து வீச்சாளர்கள் வேகத்துக்கு சாதகமான சூழ்நிலைகளில் அடி வாங்கியதிலிருந்து துவங்கியது”

- Advertisement -

சொந்த மண்ணில்:

“அங்கே தான் நமது பவுலிங் அட்டாக்கை எப்படி அடித்து நொறுக்க வேண்டும் என்ற ரகசியம் உலகிற்கு அம்பலமானது. உண்மையில் நம்முடைய வேகப்பந்து வீச்சாளர்களை விட வங்கதேசத்தினர் சிறப்பாக செயல்பட்டனர். மேலும் 125 – 135 கிலோமீட்டர் வேகத்திற்குள் வீசிய நமது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக வங்கதேசம் பேட்டிங் வரிசை உயர்ந்து நின்றது”

இதையும் படிங்க: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்டின் சாதனையை காலி செய்த முகமது ரிஸ்வான் – விவரம் இதோ

“ஷான் மசூத் தற்போது தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார். ஆஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தான் தொடரை வெல்வது அசாத்தியம் என்பது போல உணர்ந்தோம். ஆனால் தற்போது நீங்கள் வங்கதேசம் போன்ற அணிக்கு எதிராக சொந்த மண்ணில் சூழ்நிலைகளை படிக்காமல் தோற்றுள்ளீர்கள். மசூத் தனது பேட்டிங்கை முன்னேற்ற வேண்டும். பிஎஸ்எல் மற்றும் கவுண்டி தொடர்களில் கேப்டனாக செயல்பட்ட அவருக்கு ராவில்பிண்டியில் இந்த மாதிரியான அணியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தெரியவில்லை” என்று கூறினார்.

Advertisement