பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் பாகிஸ்தான அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் மூன்று வெற்றி மற்றும் நான்கு தோல்வி என ஆறு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இந்த தொடரின் ஆரம்பத்தில் அவர்கள் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி அட்டகாசமாக துவங்கியிருந்தனர்.
ஆனால் அதற்கடுத்து நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக நான்கு போட்டிகளிலும் தோல்வியை தழுவி மோசமான நிலைக்கு சென்றது. இந்நிலையில் அக்டோபர் 31-ஆம் தேதி நேற்று வங்கதேச அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் பங்கேற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பினை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்கிற நிலையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணியானது பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 204 ரன்களை மட்டுமே குவித்தது.
பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி 32.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்ய நல்ல ரன் ரேட்டுடன் தற்போது புள்ளி பட்டியலில் ஆறு புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி இனிவரும் போட்டிகளில் எவ்வாறு செயல்பட்டால் அவர்கள் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது? என்பது குறித்த சில வழிகளை இங்கு காணலாம். அந்த வகையில் மீதம் இருக்கும் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான அணி நல்ல ரன் வித்தியாசத்தில் அல்லது அதிக விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் இந்த தொடரை முடிக்க வேண்டும். அதேபோன்று இன்று நவம்பர் 1-ஆம் தேதி நடைபெற இருக்கும் தென்னாப்பிரிக்க நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியை சந்திக்க வேண்டும்.
இதையும் படிங்க : இந்தியா – இலங்கை போட்டியில் வெல்லப்போவது யார்? வரலாற்று புள்ளிவிவரம் சொல்வது என்ன.. விரிவான அலசல்
அதேபோன்று ஆப்கானிஸ்தான் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் இனிவரும் ஆட்டங்களில் தோல்வியை சந்திக்க வேண்டும். அதேபோன்று ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து அணிகள் இரண்டு போட்டிகளில் தோற்க வேண்டும். அதேபோன்று இலங்கை அணி ஒரு போட்டியிலாவது இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இவையெல்லாம் கோர்வையாக நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது மற்றபடி அவர்கள் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.