இந்தியா – இலங்கை போட்டியில் வெல்லப்போவது யார்? வரலாற்று புள்ளிவிவரம் சொல்வது என்ன.. விரிவான அலசல்

IND vs SL World Cup
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 2ஆம் தேதி மும்பையில் நடைபெறும் 33வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. அதில் இலங்கை இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் தவிப்பதுடன் செமி பைனல் வாய்ப்பை 90% நழுவ விட்டுள்ளது. போதாகுறைக்கு ஹஸரங்கா, சனாக்கா போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறியது இலங்கைக்கு பெரிய பின்னடைவாகவே இருந்து வருகிறது.

இருப்பினும் அனுபவ ஆல் ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் கடந்த சில போட்டியில் வாய்ப்பு பெற்று சிறப்பாக விளையாடியது இலங்கைக்கு உத்வேகமாக அமைந்துள்ளது. அவருடன் அசலங்கா, கருணரத்னே, நிசாங்கா, சமரவிக்ரமா, தனஞ்செயா டீ செல்வா ஆகியோர் பேட்டிங் துறையை தாங்கிப் பிடிக்கும் வீரர்களாக இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு முன்னோடியாக கேப்டன் குசால் மெண்டிஸ் மற்றும் குசால் பெரேரா ஆகியோர் வெற்றிக்கு டாப் ஆர்டரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியமாகும்.

- Advertisement -

வெல்லப் போவது யார்:
அதே சமயம் வெல்லாலகே, மஹீஸ் தீக்சனா ஆகியோர் இந்திய பேட்ஸ்மன்களுக்கு சவாலை கொடுக்கும் அளவுக்கு தரமான ஸ்பின்னர்களாக இருக்கின்றனர். குறிப்பாக வெல்லாலகே 2023 ஆசிய கோப்பையில் இந்தியாவின் விராட் கோலி போன்ற டாப் 5 பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கிய தரத்தை கொண்டுள்ளார். இவர்களுடன் மதுசங்கா, சமீரா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் வெற்றிக்கு போராட்ட தயாராக இருக்கின்றனர்.

இருப்பினும் கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை சந்தித்த இலங்கை அணியால் சொந்த மண்ணில் மிரட்டி வரும் இந்தியாவை சமாளிக்க முடியுமா என்பது சந்தேகமாகும். ஏனெனில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து போன்ற வலுவான அணிகளை தெறிக்கவிட்டுள்ள இந்தியா இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் 6 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் பிடித்து செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக வலுவான நியூசிலாந்தை 20 வருடங்கள் கழித்து தோற்கடித்த இந்தியா நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வெறும் 229 ரன்களை வைத்தே 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. மேலும் கேப்டன் ரோகித் சர்மா, கில், விராட் கோலி, ராகுல் ஆகிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் நல்ல ஃபார்மில் இந்தியாவுக்கு வலு சேர்க்கிறார்கள். அத்துடன் ஸ்ரேயாஸ் ஐயர் தடுமாறினாலும் பாண்டியா காயத்தால் விளையாடாவிட்டாலும் அதை சூரியகுமார், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சமாளிக்கும் அளவுக்கு தரமாக இருக்கின்றனர்.

அது போக பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோர் வேகத்திப் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விட்டு வரும் நிலையில் குல்தீப் யாதவ் சுழலில் மாயாஜாலம் செய்து வருகிறார். எனவே ஆசிய கோப்பை 2023 ஃபைனலில் இலங்கையை தோற்கடித்தது போலவே இப்போட்டியிலும் இந்தியா வெற்றி வாகை சூடும் என்றே சொல்லலாம்.

- Advertisement -

வரலாற்று புள்ளி விவரம்:
1. ஒருநாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை மோதிய 167 போட்டிகளில் இந்தியா 98 முறை வென்று வலுவான அணியாக திகழ்கிறது. இலங்கை 57 போட்டிகளில் வென்ற நிலையில் 11 போட்டி மழையால் கைவிடப்பட்டது. 1 போட்டி டையில் முடிந்தது. இருப்பினும் உலகக்கோப்பையில் மோதிய 9 போட்டிகளில் இந்தியா மற்றும் இலங்கை தலா 4 வெற்றிகளை பதிவு செய்து சமநிலையில் உள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: எல்லாத்துக்கும் காரணம் இந்தியாவிடம் சந்திச்ச தோல்வி தான்.. எங்களோட டார்கெட் அது தான்.. பஃகார் ஜமான் பேட்டி

2. ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக அதிக ரன்கள் (3113) அடித்த இந்திய வீரராக சச்சின் டெண்டுல்கரும் அதிக சதங்கள் (10) அடித்த வீரராக விராட் கோலியும் அதிகபட்ச ஸ்கோர் (264) பதிவு செய்த வீரராக ரோகித் சர்மாவும் சாதனை படைத்துள்ளனர். அதிக விக்கெட்டுகளை (66) எடுத்த இந்திய வீரராக ஜஹீர் கானும் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த இந்திய வீரராக முகமது சிராஜ் (6/21) சாதனை படைத்துள்ளனர். இலங்கைக்கு எதிராக இந்திய பதிவு செய்துள்ள அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் : 414 ரன்களாகும்.

Advertisement