இந்தியா பாகிஸ்தான் : நாளைய போட்டியில் விளையாடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்ட – கிரிக்கெட் நிர்வாகம்

Sarfaraz
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று முடிந்த வேளையில் தற்போது இன்று முதல் சூப்பர் 12-சுற்றுப்போட்டிகள் ஆரம்பித்துள்ளன. இதில் முதல் போட்டியாக தற்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாளை நடைபெற உள்ள முக்கியமான போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதவுள்ளன.

pak 1

- Advertisement -

பொதுவாகவே இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் பெரிய வரவேற்பு இருக்கும். அதிலும் தற்போது உலக கோப்பை போட்டியில் இவ்விரு அணிகளும் ஒரே பிரிவில் மோதுவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறப்போவது யார் ? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாளைய போட்டிக்கான அணியில் விளையாடும் வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி பாபர் அசாம் கேப்டனாக கொண்ட அந்த பட்டியலில் 12 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்த 12 வீரர்கள் கீழ்வருமாறு :

Pak

1) பாபர் அசாம், 2) முஹம்மது ரிஸ்வான், 3) பக்கர் சமான், 4) ஹைதர் அலி, 5) சோயிப் மாலிக், 6) முகமது ஹபீஸ், 7) ஆசிப் அலி, 8) ஷதாப் கான், 9) இமாத் வாசிம், 10) ஹசன் அலி, 11) ஷாகின் அப்ரிடி, 12) ரவுப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் ஒரு வீரர் மட்டும் நாளைய போட்டியில் விளையாடமாட்டார். மற்றபடி இந்த 12 பேரில் இருந்து பிளேயிங் லெவன் அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : என்ன நடந்தாலும் இவரை மட்டும் டீம்ல இருந்து தூக்கிடாதீங்க. அவர் சூப்பர் பிளேயர் – ஷேன் வார்ன் வலியுறுத்தல்

மேலும் இந்திய அணிக்கு எதிரான நாளைய போட்டியில் மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக அணி களமிறங்கும் என நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நிச்சயம் பாகிஸ்தான் அணி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக விளையாடி வருவதால் இந்திய அணிக்கு கடும் போட்டி அளிக்கும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement