PAK vs NED : லீடி 4 விக்கெட்.. தரமான பவுலிங்.. பாகிஸ்தானை ஆல் அவுட்டாக்கிய நெதர்லாந்து.. ஆரம்பத்திலேயே சாதிக்குமா?

PAK vs NED Bas Lee dee
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 6ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 2வது லீக் போட்டியில் வலுவான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கத்துக்குட்டியாக கருதப்படும் நெதர்லாந்தை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு சுமாரான ஃபார்மில் இருக்கும் பஃகார் ஜமான் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அந்த சூழ்நிலையில் களமிறங்கிய உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 5 (18) ரன்னில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். போதாகுறைக்கு மறுபுறம் தடுமாறிய மற்றொரு துவக்க வீரர் இமாம்-உல்-ஹக் 15 ரன்களில் ஆட்டமிழந்ததால் 38/3 என ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் தடுமாறியது.

- Advertisement -

நெதர்லாந்து அசத்தல்:
அப்போது அடுத்ததாக ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷாக்கீல் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சரிவை சரி செய்ய போராடினார்கள். அதில் சற்று அதிரடியாக விளையாடிய ஷாக்கீல் 9 பவுண்டரி 1 சிக்ஸருடன் அரை சதமடித்து 4வது விக்கெட்டுக்கு 128 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தானை ஓரளவு காப்பாற்றி 68 (52) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் நிதானமாக விளையாடிய ரிஸ்வானை 68 (75) ரன்களில் அவுட்டாக்கிய பஸ் டீ லீடி அடுத்ததாக வந்த இப்திகார் அகமதை அதிரடி காட்ட விடாமல் 9 ரன்களில் காலி செய்தார். அதன் காரணமாக 188/6 என மீண்டும் தடுமாறிய பாகிஸ்தானை 7வது 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அனைத்து மீட்க போராடிய சடாப் கானை 32 (34) ரன்களில் கிளீன் போல்ட்டாக்கிய லீடி அடுத்ததாக வந்த ஹசன் அலியையும் கோல்டன் டக் அவுட்டாக்கி மிரட்டினார்.

- Advertisement -

இறுதியில் மறுபுறம் போராடிய முகமது நவாத் ஃபினிஷிங் செய்யாமல் 39 ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இறுதியில் சாகின் அப்ரிடி 13*, ஹரிஷ் ரவூப் 16 ரன்கள் எடுத்த போதிலும் 50 ஓவர்கள் பாகிஸ்தானை தாக்குப் பிடிக்க விடாத நெதர்லாந்து 49 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட அந்த அணி சார்பில் நட்சத்திர ஆல் ரவுண்டர் பஸ் டீ லீடி 4 விக்கெட்களையும் அக்கர்மேன் 2 விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தினர்.

இதையும் படிங்க: வெறும் 115 ரன்.. நாக் அவுட்டில் பாகிஸ்தானை ஓடவிட்ட ஆப்கானிஸ்தான்.. ஃபைனலில் இந்தியாவுடன் மோதல் உறுதியா?

அந்த வகையில் வலுவான பாகிஸ்தானை தரமான பந்து வீச்சால் நெதர்லாந்து கட்டுப்படுத்தியுள்ளது இப்போட்டியில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமீபத்திய ஆசிய கோபையில் தோற்ற பாகிஸ்தான் உலகக் கோப்பை பயிற்சி போட்டிகளிலும் 2 தோல்விகளை சந்தித்தது. எனவே பாகிஸ்தானை இப்போட்டியில் வீழ்த்தி ஆரம்பத்திலேயே தங்களை திரும்பி பார்க்க வைக்கும் முனைப்புடன் நெதர்லாந்து பேட்டிங்கில் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement