சீனாவில் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அக்டோபர் 6ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 11.30 மணிக்கு ஹங்கொழு நகரில் நடைபெற்ற 2வது இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு மிர்ஸா பெய்க் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
அந்த நிலைமையில் அடுத்ததாக வந்த ரோகைல் நசீர் 10 ரன்களில் அவுட்டாக மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த மற்றொரு துவக்க வீரர் ஓமர் யூசுப் 24 (19) ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் 54/3 என ஓரளவு நல்ல துவக்கத்தை பெற்று தடுமாறிய பாகிஸ்தானுக்கு மிடில் ஆர்டரில் நிதானத்தை காட்ட வேண்டிய கேப்டன் காசிம் அக்ரம் 9, ஹைதர் அலி 2, குஷ்தில் ஷா 8, ஆசிப் அலி 8 என 4 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி மெகா பின்னடைவை கொடுத்தனர்.
ஃபைனலில் ஆப்கானிஸ்தான்:
இறுதியில் அர்பாத் மினாஸ் 14 ரன்களும் அமீர் ஜாமேல் 13 ரன்கள் எடுத்தும் 20 ஓவர்கள் தாக்குப் பிடிக்க முடியாத பாகிஸ்தான் 18 ஓவரில் வெறும் 115 ரன்களுக்கு சுருண்டது. அந்தளவுக்கு ஆரம்பம் முதலே பந்து வீச்சில் மிரட்டியாக ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக பரீட் அஹமத் 3 விக்கெட்டுகளும் ஜாகிர் கான், காசிஸ் அகமத் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் எடுத்தனர்.
அதை தொடர்ந்து 116 ரன்கள் துரத்தி ஆப்கானிஸ்தானுக்கு அட்டல் 5, முகமது சேசாத் 9 என துவக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அந்த நிலைமையில் வந்த சகிதுல்லா 9 அப்சர் சாசாய் 13 ரன்களில் அவுட்டானாலும் 3வது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நூர் அலி ஜாட்ரான் 39 (33) ரன்கள் குவித்து அசத்தினார். இறுதியில் கரீம் ஜானத் 3 ரன்னில் அவுட்டானாலும் கேப்டன் குல்பதின் நைப் 1 பவுண்டரி 3 சிக்சருடன் அதிரடியாக 26 (19) ரன்கள் எடுத்தார்.
அதனால் 17.5 ஓவரிலேயே 116/6 ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் பரம எதிரி பாகிஸ்தானை வீழ்த்தியது அந்நாட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. அதனால் வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்த ஆப்கானிஸ்தான் அக்டோபர் 7ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவதற்கு தகுதி பெற்றது.
இதையும் படிங்க: CWC 2023 : ரச்சின் அந்த இந்திய லெஜெண்ட் மாதிரியே பேட்டிங் பண்றாரு.. வம்சவாளி வீரருக்கு கும்ப்ளே பாராட்டு
மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தானுக்கு அர்பாத் மினாஸ், உஸ்மான் காதர் 2 விக்கெட்டுகளை எடுத்தும் பரிதாபமாக தொல்லையை சந்தித்தது. அதனால் பாகிஸ்தான் நாளை நடைபெறும் போட்டியில் வெண்கல பதக்கத்திற்காக வங்கதேசத்துடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.