போராட்டதிற்கு கிடைத்த பரிசு.. வீரர்களின் சம்பளத்தை உயர்த்திய பாகிஸ்தான் வாரியம் – புதிய சம்பள பட்டியல் இதோ

Pakistan team babar azam
- Advertisement -

இந்தியாவில் நடைபெறும் ஐசிசி 2023 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியினர் ஹைதராபாத் நகரை வந்தடைந்தனர். இருநாட்டுக்குமிடையே எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் விளையாடிய அவர்கள் 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியா வந்த போது ரசிகர்கள் ஏராளமான ஆதரவு கொடுத்து வரவேற்றார்கள்.

முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணிகளில் ஒன்றாக திகழும் பாகிஸ்தானுக்காக விளையாடும் வீரர்களுக்கு கடந்த 4 மாதங்களாக அந்நாட்டு வாரியம் சம்பளம் கொடுக்காமல் இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. குறிப்பாக ஒப்பந்தப்படி ஸ்பான்சர்ஷிப் நிறுவனங்கள் தேவையான நிதியை கொடுப்பதற்கு தாமதம் செய்வதால் பாகிஸ்தான் வீரர்களுக்கு தொடர்ச்சியான சம்பளத்தை வழங்க முடியாமல் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தாமதப்படுத்துவதாக செய்திகள் தெரிவித்தனர்.

- Advertisement -

புதிய சம்பளம்:
மறுபுறம் ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறைவாக இருப்பதால் உயர்த்திக் கொடுக்குமாறு கோரிக்கை வைத்து வந்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக அமைந்தது. அந்த சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு இலவசமாக விளையாட தயாராக இருக்கிறோம் ஆனால் அதற்காக ஸ்பான்சர்ஷிப் நிறுவனங்களின் பெயர்களை ஜெர்சியில் இணைந்து விளையாட முடியாது என்று அந்நாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறிப்பாக இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பையில் ஸ்பான்ஷர்ஷிப் நிறுவனங்களின் பெயர்களை ஜெர்சியில் அணிந்து விளையாட முடியாது என்று பாகிஸ்தான் வீரர்கள் அந்நாட்டு வாரியத்திடம் திட்டவட்டமாக தெரிவித்ததாக டைம்ஸ் ஆப் கராச்சி எனும் இணைப்பில் செய்திகள் வெளியானது. இந்த சூழ்நிலையில் அடுத்த 3 வருடங்களுக்கு பாகிஸ்தான் வீரர்களுக்கான சம்பளம் உயர்த்தப்படுவதாக அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளுக்கு முறையே 50%, 25%, 12.5% என்றளவுக்கு பாகிஸ்தான் வீரர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படுவதாக அந்நாட்டு வாரியம் கூறியுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம் ஜூலை 1, 2023 முதல் ஜுன் 30, 2026 வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் பாபர் அசாம், முகமது ரிஷ்வான், ஷாகின் அப்ரிடி ஆகியோருக்கு மாதம் தலா 4.5 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்கள் அதாவது 15,000 அமெரிக்க டாலர்கள் சம்பளமாக கொடுக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: என்னாது 10 வருஷமாச்சா.. 2023 உ.கோ முன் ஜடேஜா பேட்டிங் பற்றி – ரசிகர்களுக்கு கவலையை உண்டாக்கும் மோசமான 3 புள்ளிவிவரம்

பி பிரிவில் இடம் பிடித்துள்ள சில கிரிக்கெட்டில் மட்டும் விளையாடும் சடாப் கான், பகார் ஜமான், ஹாரிஸ் ரவூப், நாசிம் ஷா, இமாம்-உல்-ஹக், முகமது நவாஸ் ஆகியோருக்கு தலா 10000 டாலர்கள் மாதம் கொடுக்கப்பட உள்ளது. சி பிரிவில் இடம் பிடித்துள்ள இமாத் வாசிம், அப்துல்லா சபிக் ஆகியோருக்கு தலா 6000 டாலர்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் மட்டும் விளையாடும் பாஹிம் அஸ்ரப், அசான் அலி, இப்திகார் அகமது சர்ப்ராஸ் அஹமது உள்ளிட்ட இதர வீரர்களுக்கு மாதம் தரும் தலா 1700 டாலர்கள் வழங்கப்பட உள்ளது.

Advertisement