இந்தியா – பாக் போட்டியை வேற எதுவும் நெருங்க கூட முடியாது.. ஆனா அதுல அந்த டீம் வீக்கா இருப்பது உண்மை தான் – வக்கார் யூனிஸ்

Waqar Younis
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாலமாக துவங்கி நவம்பர் 19 வரை நடைபெறுகிறது. அதில் ரோஹித் சர்மா தலைமையில் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாகவும் சொந்த மண்ணில் வலுவான அணியாகவும் திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

அதே போல அக்டோபர் 14ஆம் தேதி லட்சம் ரசிகர்கள் அமரக்கூடிய உலகின் மிகப்பெரிய அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டியில் வெற்றி வாகை சூடி காலம் காலமாக தோற்காமல் வைத்திருக்கும் கௌரவத்தையும் இந்தியா காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பும் உச்சகட்டமாக இருக்கிறது. முன்னதாக உலகக் கோப்பையில் பெரும்பாலும் இந்தியா வெல்வதால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தரமற்றதாக இருப்பதாக முன்னாள் கேப்டன் கங்குலி சமீபத்தில் விமர்சித்து இருந்தார்.

- Advertisement -

வீக்கான டீம்:
இந்நிலையில் உலகிலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு வேறு எந்த போட்டியும் நிகராகாது என்று வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்தியாவை விட பாகிஸ்தான் சற்று பலவீனமான அணியாகவே இருப்பதாக ஒப்புக்கொள்ளும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்தியா – பாகிஸ்தான் போட்டி மிகப்பெரியது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அது எஞ்சிய இதர போட்டிகளுக்கு தாயாகும்”

“எனவே நீங்கள் அகமதாபாத் மைதானத்தில் விளையாடும் போது உங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்தியாவுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தான் சற்று பலவீனமான அணியாக இருப்பதால் சற்று அதிகப்படியான அழுத்தத்திற்கு உள்ளாகும். அதே சமயம் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவது இந்தியாவுக்கும் அழுத்தத்தை கொடுக்கும்”

- Advertisement -

“இருப்பினும் செயல்பாடுகளை மட்டும் அடிப்படையாக வைத்து ஒப்பிட்டால் இந்தியா சற்று சிறந்த அணியாக இருக்கிறது. மறுபுறம் பாகிஸ்தான் அணியை பற்றி பேசும் போது அவர்கள் சில குறைகள் மற்றும் அடிகளுடன் களமிறங்குகின்றனர். குறிப்பாக நாசீம் ஷா காயத்தால் வெளியேறியுள்ளது பாகிஸ்தான் அணிக்கு பெரிய பின்னடைவாகும். ஏனெனில் ஷாஹீன் அப்ரிடியும் அவரும் புதிய பந்தில் ஒருவரை ஒருவர் சார்ந்து சிறப்பாக செயல்பட கூடியவர்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 2011இல் சச்சின் எங்கள ஹெட்போன் போட்டுக்க சொன்னாரு.. 2023 உ.கோ வெல்ல இந்திய அணிக்கு – முக்கிய ஆலோசனை கொடுத்த யுவி

அவர் கூறுவது போல 50 ஓவர் உலகக் கோப்பையில் இதுவரை சந்தித்த 7 போட்டிகளிலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 100% வெற்றிகளை பெற்றுள்ளது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை 2023 தொடரிலும் சூப்பர் 4 சுற்றில் 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா காணாத சாதனை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement