வெளிநாடு மாதிரி இருக்கு.. எங்களோட தோல்விக்கு இந்தியாவின் சூழ்நிலை தான் காரணம்.. பாக் கோச் வித்யாச பேட்டி

Grand Bradburn
- Advertisement -

இந்தியாவில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 1992 போல கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் 6 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்து திண்டாடி வருகிறது. குறிப்பாக நெதர்லாந்து மற்றும் இலங்கையை எளிதாக தோற்கடித்து நல்ல துவக்கத்தை பெற்ற அந்த அணி இந்தியாவிடம் வரலாற்றில் 8வது முறையாக உலகக் கோப்பையில் தோற்றது.

அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிடமும் அடிவாங்கி தோற்ற அந்த அணி வரலாற்றில் முதல் முறையாக கத்துக்குட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவமான தோல்வியை பதிவு செய்தது. அதன் காரணமாக வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான் சென்னையில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் 1 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

- Advertisement -

வெளிநாடு மாதிரி இருக்கு:
இந்த தோல்விகளுக்கு பாகிஸ்தானின் சுமாரான செயல்பாடுகள் முக்கிய காரணமாக இருந்தாலும் இந்தியாவில் இருக்கும் மைதானங்களில் பவுண்டரி அளவு சிறிதாக இருப்பதாலேயே தங்களுடைய பவுலர்கள் தடுமாறுவதாக இமாம்-உல்-ஹக் தெரிவித்திருந்தார். மேலும் அகமதாபாத் மைதானத்தில் தில்தில் பாகிஸ்தான் உத்வேக பாடல் ஒலிபரப்பாததே தோல்விக்கு காரணம் என்று அந்த அணியின் இயக்குனர் நிக்கி யாத்தர் வேடிக்கையான சாக்கை சொன்னார்.

இந்நிலையில் தங்களுடைய தோல்விகளுக்கு இந்தியாவின் கால சூழ்நிலைகள் தான் காரணமாக இருப்பதாக பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் கிரேண்ட் ப்ராட்பர்ன் தெரிவித்துள்ளார். அதாவது ஐபிஎல் தொடரில் விளையாடாத காரணத்தால் முதல் முறையாக இந்தியாவில் விளையாடுவது வெளிநாட்டில் விளையாடுவதைப் போன்ற சவாலை கொடுத்து பின்னடைவை ஏற்படுத்துவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த உலகக் கோப்பை எங்களுக்கு வெளிநாடுகளில் விளையாடுவது போன்ற கால சூழ்நிலைகளை கொடுக்கிறது. இதற்கு முன் எங்கள் வீரர்கள் இங்கு விளையாடியதில்லை. இத்தொடரில் நடைபெறும் ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு புதிய மைதானத்தில் நடைபெறுகிறது. பொதுவாக நாங்கள் எங்களுடைய எதிரணிகள் மற்றும் அவர்களை சந்திக்கும் மைதானங்களுக்கு தகுந்தாற்போல் திட்டங்களை சிறப்பாக வகுப்போம்”

இதையும் படிங்க: வாவ் 25 வருஷமா திணறும் அவங்கள விட நீங்க எவ்வளவோ பெஸ்ட்.. ஆப்கானிஸ்தானை பாராட்டிய சேவாக்

“ஆனால் இந்த உலகக் கோப்பையில் ஒவ்வொரு போட்டியும் புதிய மைதானத்தில் நடைபெறுகிறது. இருப்பினும் எங்களிடம் அறிவு, தரம், திறமை ஆகியவற்றின் அடிப்படையில் நல்ல வீரர்கள் இருப்பதால் அதை நாங்கள் பாதகமாக உணரவில்லை” என்று கூறினார். இருப்பினும் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கால சூழ்நிலையில் மைதானங்கள் தான் இருக்கும் என்பது அனைவருக்குமே தெரிந்ததாகும். அதை விட ஆசிய கண்டத்திலேயே இல்லாத நெதர்லாந்து மிகவும் புதிதான இந்திய சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்பட்டு தென்னாப்பிரிக்காவையே தங்களுடைய திறமையால் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement