வாவ் 25 வருஷமா திணறும் அவங்கள விட நீங்க எவ்வளவோ பெஸ்ட்.. ஆப்கானிஸ்தானை பாராட்டிய சேவாக்

Virender Sehwag 2
Advertisement

இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 30ஆம் தேதி புனேவில் நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆப்கானிஸ்தான் தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை நிசாங்கா 46, குசால் மெண்டிஸ் 39 ரன்கள் எடுத்த உதவியுடன் 242 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதைத் துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு இப்ராஹிம் ஜாட்ரான் 39, ரஹ்மத் ஷா 62, கேப்டன் ஷாகிதி 58*, ஓமர்சாய் 73* என டாப் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 45.2 ஓவரிலேயே எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் மதுசங்கா அதிகபட்சமாக 2 விக்கெட்கள் எடுத்தும் இலங்கை பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

சேவாக் பாராட்டு:
மறுபுறம் 3வது வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. குறிப்பாக கத்துக்குட்டியாக பார்க்கப்படும் அந்த அணி இந்த உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனாக இருக்கும் வலுவான இங்கிலாந்தை முதல் முறையாக தோற்கடித்து மொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்து தங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் என்பதை காட்டியது.

அதே வேகத்தில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை ஒருநாள் கிரிக்கெட்டில் 7 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக தோற்கடித்து வரலாற்றை மாற்றிய ஆப்கானிஸ்தான் அனைவரது பாராட்டுகளை அள்ளியது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது இலங்கையையும் தோற்கடித்துள்ள அந்த அணி உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் வென்று மற்றுமொரு சரித்திரம் படைத்துள்ளது.

- Advertisement -

மொத்தத்தில் 1992 சாம்பியன் பாகிஸ்தான், 1996 சாம்பியன் இலங்கை, 2019 சாம்பியன் இங்கிலாந்து ஆகிய 3 வலுவான அணிகளை தோற்கடித்துள்ள ஆப்கானிஸ்தான் தங்களை கத்துக்குட்டி அல்ல என்பதை நிரூபித்துள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் 25 வருடங்களாக விளையாடி வரும் வங்கதேசம் இன்னும் திணறும் நிலையில் அடுத்தடுத்து பெரிய அணிகளை தோற்கடிக்கும் ஆப்கானிஸ்தான் குறுகிய காலத்திலேயே பெரியளவில் முன்னேறியுள்ளதாக வீரேந்திர சேவாக் மனதார பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: பால் ஸ்விங் ஆகல.. அதால பிளானை மாத்திட்டேன்.. இலங்கையை வீழ்த்திய ஆட்டநாயகன் – பசல்ஹக் பரூகி பேட்டி

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “வாவ் ஆப்கானிஸ்தான் என்ன ஒரு செயல்பாடு. ஆப்கானிஸ்தான் காட்டியுள்ள நேர்மை தன்மையிடம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம். கடந்த 25 வருடங்களாக விளையாடும் வங்கதேசம் பெரிய அணிகளை அடுத்தடுத்து தோற்கடித்ததில்லை. ஆனால் அதை ஆப்கானிஸ்தான் குறுகிய காலத்திலேயே செய்துள்ளது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் மிகவும் குறுகிய காலத்தில் முன்னேறியுள்ள அணியாக அசத்துகிறது” என்று கூறியுள்ளார்.

Advertisement