ஆசிய கோப்பை ஜெர்ஸியில் பாகிஸ்தானுக்கு எதிரா இந்தியா சதி பண்ணீட்டாங்க – சர்ச்சை கிளப்பிய முன்னாள் பாக் வீரர்கள்

Asia Cup Jersey
Advertisement

ஐசிசி நடத்தும் 2023 உலகக் கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் தயாராகும் வகையில் 2023 ஆசிய கோப்பை தொடர் 50 ஓவர் போட்டிகளாக நடந்து வருகிறது. முன்னதாக இத்தொடரை நடத்துவதற்கான உரிமையை ஜெய் ஷா தலைமையிலான ஆசிய கவுன்சில் கூட்டத்தில் கடந்த வருடமே பாகிஸ்தான் வாங்கியது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டோம் என்று அறிவித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதை பொதுவான இடத்தில் நடத்துவதற்கான அழுத்தம் கொடுப்போம் என்று தெரிவித்தார். அதற்கு பதிலடியாக எங்கள் நாட்டுக்கு வராமல் போனால் உங்கள் நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பையை நாங்களும் புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் அறிவித்தது.

அப்போதிலிருந்தே இரு நாட்டுக்கு மத்தியில் இந்த விவகாரம் அனல் பறந்து வந்த நிலையில் இறுதியாக உரிமையை கொடுத்து விட்டதால் பாகிஸ்தான் பங்கேற்கும் 4 போட்டிகளை அவர்களுடைய நாட்டிலேயே நடத்துவதற்கு அனுமதி வழங்கிய ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இந்தியா பங்கேற்கும் எஞ்சிய போட்டிகள் மற்றும் ஃபைனல் பொதுவான இடமான இலங்கையில் நடைபெறும் எனவும் அறிவித்தது. அந்த வகையில் பெரும்பாலான போட்டிகள் இலங்கையில் நடைபெற்றாலும் இத்தொடரை நடத்தும் நாடாக பாகிஸ்தான் தான் இருக்கிறது.

- Advertisement -

ஜெர்ஸியில் சர்ச்சை:
அந்த நிலைமையில் பொதுவாகவே இது போன்ற பலதரப்பு அணிகள் பங்கேற்கும் ஆசிய மற்றும் உலகக் கோப்பை போன்ற தொடர்களில் களமிறங்கும் அணிகளின் ஜெர்ஸியின் இடதுபுறத்தில் தொடரின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். அதற்கு கீழே தொடரை நடத்தும் நாட்டின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக பொருளாதார நெருக்கடியால் கடந்த ஆசிய கோப்பை துபாயில் நடைபெற்றாலும் அத்தொடரை நடத்திய இலங்கையின் பெயர் அனைத்து அணிகளின் ஜெர்சியில் ஆசிய கவுன்சிலின் லோகோவுக்கு கீழ் பொறிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இம்முறை இந்தியா இலங்கை உட்பட அனைத்து அணியின் ஜெர்ஸியிலும் ஆசிய கோப்பையின் லோகோ மட்டுமே இருக்கிறதே தவிர அதற்கு கீழ் பாகிஸ்தான் பெயர் இடம் பெறவில்லை. சொல்லப்போனால் பாகிஸ்தான் அணியின் ஜெர்சியில் கூட அவர்களுடைய நாட்டின் பெயர் லோகவுக்கு கீழ் இடம் பெறவில்லை. இந்நிலையில் அப்படி தொடரை நடத்தும் நாடாக இருந்தும் பாகிஸ்தானின் பெயர் இடம் பெறாதது பெரிய அவமானம் என்று விமர்சிக்கும் முன்னாள் வீரர் ரசித் லதீப் இதற்கு ஆசிய கவுன்சில் விளக்கம் கொடுக்க வேண்டுமென விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கான காரணத்தை ஆசிய கோப்பையை நடத்தும் ஆசிய கவுன்சில் நிச்சயம் விளக்க வேண்டும். குறிப்பாக தற்போதைய நிலைமையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே நிலவும் பதற்றமான சூழ்நிலையில் பிசிசிஐ அதிகாரிகள் தங்களுடைய அணி வீரர்களின் ஜெர்ஸியில் ஆசிய கோப்பை லோகோவுடன் பாகிஸ்தான் பெயர் இருக்க விரும்பாத காரணத்தாலேயே இந்த வேலையை செய்துள்ளார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இதனால தான் இவர் லெஜெண்ட் : விராட் – பாபர், அப்ரிடி – பும்ரா ஆகியோரில் சிறந்த வீரர்களை தேர்வு செய்த வாசிம் அக்ரம்

அதே போல மற்றொரு முன்னாள் வீரர் மோசின் கான் விமர்சித்தது பின்வருமாறு. “இந்த முரண்பாட்டிற்கு ஆசிய கவுன்சில் தெளிவான விளக்கத்தை கொடுத்தாக வேண்டும்” என்று கூறினார். அப்படி இத்தொடர் சமூகமாக நடந்து கொண்டிருக்கும் போது முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

Advertisement