அவர் இல்லைனா ஒன்னுமில்ல.. முதல் மேட்ச்லயே மழை வந்ததால் தப்பிச்சுட்டாங்க – பாக் அணியின் பலவீனத்தை உடைத்த கவாஸ்கர்

Sunil Gavaskar 5
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 தொடரில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சூப்பர் 4 சுற்றுடன் தோல்வியை சந்தித்து வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. குறிப்பாக சாகின் அப்ரிடி, ஹரிஷ் ரவூப், நாசீம் ஷா ஆகிய அதிரடியான வேகத்தில் ஸ்விங் செய்து வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களால் இந்தியா, இலங்கை போன்ற இதர அணிகளை காட்டிலும் பாகிஸ்தான் உலகத்தரம் வாய்ந்த பவுலிங் அட்டாக்கை கொண்டிருப்பதால் நிச்சயம் வெல்லும் என்று நிறைய முன்னாள் வீரர்கள் கணித்தனர்.

அதற்கேற்றார் போல் இந்த தொடரின் லீக் சுற்றில் பாகிஸ்தான் பவுலர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்து 66/4 என கட்டுப்படுத்தி ஆரம்பத்திலேயே பெரிய அச்சுறுத்தலை கொடுத்தனர். இருப்பினும் அதையும் தாண்டி இசான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இந்தியாவை 266 ரன்கள் எடுக்க வைத்த நிலையில் மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டது. ஆனால் சூப்பர் 4 சுற்றில் அதே பவுலர்களை அடித்து நொறுக்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தானுக்கு 228 ரன்கள் வித்தியாசத்தில் வரலாறு காணாத தோல்வியை பரிசளித்தனர்.

- Advertisement -

உண்மையான நிலவரம்:
அதில் மனமுடைந்து மோசமான ரன்ரேட்டை பெற்ற பாகிஸ்தான் இலங்கைக்கு எதிரான போட்டியிலும் தோற்று பரிதாபமாக வெளியேறியது. இந்நிலையில் பாகிஸ்தான் பவுலிங் ஓரளவு சிறப்பாக இருந்தாலும் பேட்டிங்கில் பெரிய ரன்களை அடிப்பதற்கு பாபர் அசாம் தவிர்த்து யார் இருக்கிறார் என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். அதனால் லீக் போட்டியில் போராடி 266 ரன்கள் அடித்த இந்தியா மழை வராமல் போயிருந்தால் எளிதாக பாகிஸ்தானை தோற்கடித்திருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“கிரிக்கெட்டில் அப்படி நடந்தால் அல்லது இப்படி நடந்திருந்தால் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் பேட்டிங் செய்த விதத்தை வைத்து பார்க்கும் போது முதல் போட்டி மழையால் பாதிக்காமல் நடைபெற்றிருந்தால் 226 ரன்களை இந்தியா எளிதாக கட்டுப்படுத்தியிருக்கும் என்று தெரிகிறது. ஆனால் இந்திய அணியில் ஒரு சில தரமான பேட்ஸ்மேன்கள் மட்டுமே இருப்பதாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் பேசுகின்றனர்”

- Advertisement -

“இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியில் எத்தனை தரமான பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர்? குறிப்பாக பாபர் அசாம் தவிர்த்து அவர்களிடம் இருப்பது யார்? மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக எந்த அணி விளையாடினாலும் அவர்கள் வகுக்கும் திட்டங்களில் பாபர் அசாமை எப்படி அவுட்டாக்கலாம் என்பதை வகுப்பதற்காகவே அதிக நேரத்தை செலவிடுகின்றனர். அதே சமயம் எதிரணிகள் எஞ்சிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பற்றி விவாதிக்க அரை மணி நேரம் கூட ஒதுக்குவதில்லை”

இதையும் படிங்க: ஆல் ரவுண்டரான அவர் இப்டியே ரன்கள் அடிக்காம ஓட்டுனா.. இந்தியா ஜெய்ப்பது ரொம்ப கஷ்டம் – டிகே கவலை பேட்டி

“அதாவது எதிரணி பவுலர்களை பயமுறுத்தும் அளவுக்கு பாபர் அசாமை தவிர்த்து பாகிஸ்தான் அணியில் தரமான பேட்ஸ்மேன்கள் இல்லை என்பதை அதற்கு காரணமாகும்” என்று கூறினார். அவர் கூறுவது போல பாபர் அசாம் சிறப்பாக செயல்படும் போது அசத்தும் பாகிஸ்தான் எஞ்சிய பேட்ஸ்மேன்கள் கைவிடும் போது தோல்வியை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement