ஆல் ரவுண்டரான அவர் இப்டியே ரன்கள் அடிக்காம ஓட்டுனா.. இந்தியா ஜெய்ப்பது ரொம்ப கஷ்டம் – டிகே கவலை பேட்டி

Dinesh karthik
- Advertisement -

ஐசிசி 2023 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் காயத்திலிருந்து குணமடைந்த கேஎல் ராகுல், பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டது இந்திய அணிக்கு பலமாக அமைந்துள்ளது. இருப்பினும் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டரான அக்சர் படேல் வங்கதேசத்துக்கு எதிரான கடைசி சூப்பர் 4 போட்டியில் 42 ரன்கள் குவித்து போராடி ஆட்டமிழந்தார். அதை விட அப்போட்டியில் காயத்தை சந்தித்து வெளியேறியுள்ள அவர் உலகக்கோப்பையில் விளையாடுவாரா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.

அந்த நிலைமையில் முதன்மை சுழல் பந்து வீச்சு ஆல் ரண்டராக இருக்கும் ரவீந்திர ஜடேஜா பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் சிறப்பாக செயல்படுவது அவசியமாகிறது. இருப்பினும் பந்து வீச்சில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தும் ஜடேஜா பேட்டிங்கில் தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக 2022க்குப்பின் 6 அல்லது அதற்கு கீழ் வரிசையில் இதுவரை 10 இன்னிங்ஸில் விளையாடிய ஜடேஜா வெறும் 158 ரன்களை 22.57 என்ற சுமாரான சராசரியிலேயே எடுத்துள்ளார்.

- Advertisement -

டிகே கவலை:
மறுபுறம் அதே இடங்களில் 12 இன்னிங்ஸில் விளையாடிய அக்சர் படேல் 297 ரன்களை 37.12 என்ற சராசரியில் எடுத்துள்ளார். அந்த வகையில் கீழ் வரிசையில் தடுமாறும் ஜடேஜா வங்கதேசத்துக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் முக்கியமான நேரத்தில் 7 ரன்னில் அவுட்டானது இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது. இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா இப்படி பேட்டிங்கில் ரன்கள் அடிக்க முடியாமல் தடுமாறுவது 2023 உலகக்கோப்பைக்கு முன்பாக கவலையை ஏற்படுத்துவதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா தம்முடைய பேட்டிங்கில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துபவராகவும் நம்பிக்கையை கொடுப்பவராகவும் இருக்கிறார். ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் முக்கிய வீரரான அவர் தன்னுடைய பேட்டிங்கில் சிறப்பாக இல்லை. 2013 சாம்பியன் டிராபி போல அவர் சிறப்பாக செயல்படும் போதெல்லாம் இந்தியா பெரிய வெற்றிகளை பெற்றுள்ளது”

- Advertisement -

“எனவே முக்கிய தொடர்களில் இந்தியா வெல்ல அவர் பேட்டிங்கில் அசத்த வேண்டும். அதை செய்தால் பந்து வீச்சில் அசத்தவில்லை என்றாலும் அவருடைய பேட்டிங்கால் இந்தியா வெற்றி காண முடியும். ஆனால் அவர்கள் ரன்கள் அடிக்காமல் போனால் அது இந்தியாவுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். இது போக அக்சர் படேல், ஜடேஜா இருவருமே இடது கை ஸ்பின்னர்களாக இருப்பது மற்றும் ஒரு கவலையளிக்கும் விஷயமாகும்”

இதையும் படிங்க:IND vs SL : பறந்து வந்த தமிழக வீரருக்கு இடம். பைனலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை டாசின் போது – ரோஹித் சர்மா அறிவிப்பு

“அதில் அக்சர் பட்டேல் பேட்டிங்கில் அசத்தினாலும் சூப்பர் 4 சுற்றில் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் கூட பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை” என்று கூறினார். இருப்பினும் 2019 உலகக் கோப்பை செமி ஃபைனல் அல்லது 2023 ஐபிஎல் ஃபைனல் போல ரவீந்திர ஜடேஜா மிகப்பெரிய அழுத்தமான போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்யும் திறமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement