IND vs SL : பறந்து வந்த தமிழக வீரருக்கு இடம். பைனலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை டாசின் போது – ரோஹித் சர்மா அறிவிப்பு

Rohit
- Advertisement -

கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி துவங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று செப்டம்பர் 17-ஆம் தேதியுடன் நிறைவு பெற இருக்கிறது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடிய இந்த தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றனர். அதன்படி செப்டம்பர் 17-ம் தேதி இன்றுடன் இந்த தொடரானது நிறைவடைய இருக்கிறது.

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த இறுதிப் போட்டிக்கான டாஸ் சற்று முன்னர் போடப்பட்டது. இந்த டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது இந்திய அணி பந்துவீச தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அணியில் உள்ள மாற்றங்களை டாசுக்கு பிறகு ரோகித் சர்மா அறிவித்தார்.

அதன்படி கடந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வில் இருந்த முக்கிய வீரர்கள் அணிக்கு திரும்புகிறார்கள் என்றும் அதே போன்று அக்சர் பட்டேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் லெவனில் விளையாடுவதாகவும் ரோஹித் சர்மா அறிவித்தார்.

- Advertisement -

இந்திய அணியின் பேட்டிங் வரிசை மற்றும் பந்துவீச்சை வரிசை என இரண்டுமே பலமாக உள்ளதால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவே அதிக சாதகம் உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதன்படி இந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஆசிய கோப்பை பைனல்ல ஜெயிச்சாலும் அது வேஸ்ட் தான். பொன்னான வாய்ப்பை தவறவிட்ட – இந்திய அணி

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) கே.எல் ராகுல், 5) இஷான் கிஷன், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) வாஷிங்டன் சுந்தர், 9) குல்தீப் யாதவ், 10) பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement