IND vs ENG : அதிர்ஷ்டமின்மை, விமர்சனம் – திண்டாடும் விராட் கோலிக்கு பாபர் அசாம் கொடுத்த மெகா ஆதரவு

Babar-Azam-and-Virat-Kohli
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 14-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மண்ணைக் கவ்வியது. இத்தொடரின் முதல் போட்டியில் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மீண்டும் இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சில் 49 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிக பட்சமாக மொய்ன் அலி 47 ரன்களையும் டேவிட் வில்லி 41 ரன்களும் லியம் லிவிங்ஸ்டன் 33 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 247 என்ற இலக்கைத் துரத்திய இந்தியா ரோகித் சர்மா 0, ஷிகர் தவான் 9, ரிஷப் பண்ட் 0, விராட் கோலி 16 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் 31/4 என ஆரம்பத்திலேயே திணறியது. அந்த சமயத்தில் நங்கூரத்தை போட முயன்ற சூர்யகுமார் யாதவ் 27, ஹர்திக் பாண்டியா 29 என பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டான நிலையில் கடைசியில் ரவீந்திர ஜடேஜா 29 ரன்களும் முகமது சமி 23 ரன்களும் எடுத்து போராடி அவுட்டானார்கள்.

- Advertisement -

ஏமாற்றிய விராட்:
அதனால் 38.5 ஓவரில் 146 ரன்களுக்கு இந்தியாவை சுருட்டிய இங்கிலாந்து 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது. முன்னதாக இப்போட்டியில் காயத்திலிருந்து குணமடைந்தது திரும்பிய விராட் கோலி தன்மீது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை அம்பு பாய்ந்து வரும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் ரோஹித் – தவான் ஓபனிங் ஜோடி சொற்ப ரன்களில் அவுட்டானதால் இந்தியாவை சதமடித்து காப்பாற்றுவார் என்று வீரேந்திர சேவாக் உட்பட நிறைய பேர் எதிர்பார்த்தனர்.

ஆனால் 3 பவுண்டரிகளை விளாசி 16 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை பெற்ற அவர் வழக்கம் போல அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்தை வேண்டுமென்றே இழுத்தடிக்க முயன்று கேட்ச் கொடுத்து மீண்டும் ரசிகர்களை ஏமாற்றினார். கடந்த பல வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் ரன் மெஷினாக 70 சதங்களை அடித்து நிறைய சரித்திர வெற்றிகளைப் பெற்று கொடுத்துள்ள அவர் ஏற்கனவே தன்னை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று நிரூபித்தவர்.

- Advertisement -

அதிர்ஷ்டமின்மை – ஏமாற்றம்:
இருப்பினும் கடைசியாக கடந்த 2019இல் சதமடித்த அவர் அதன்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 100 போட்டிகளுக்கும் மேலாக சதத்தை அடிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். இத்தனைக்கும் கேப்டன்ஷிப் அழுத்தம் தமது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த அவர் அதிலிருந்து விலகி கடந்த ஜனவரியில் இருந்து சாதாரண வீரராக விளையாடி வரும் போதிலும் சதத்தை அடிக்க முடியவில்லை. இருப்பினும் இடையிடையே 50, 70 போன்ற ரன்களை அடித்து வரும் அவர் ஆரம்ப காலங்களில் அபாரமாக செயல்பட்டு களமிறங்கினாளே சதமடிப்பார் என்ற அளவுக்கு தனக்கென்று ஒரு தரத்தை உருவாக்கியுள்ளதால் அனைவரும் அவரை பார்ம் அவுட் என்றே கருதுகிறார்கள்.

அதிலும் பெரிய பெயரை வைத்துக்கொண்டு சதங்கள் போன்ற பெரிய ரன்களை எடுக்காமல் எத்தனை நாட்கள் அணியில் நீடிக்க முடியும் என்று ஜாம்பவான் கபில்தேவ் உட்பட கடந்த சில வருடங்களில் அவரை விமர்சிக்காதவர்களே இல்லை. மேலும் ரவி சாஸ்திரி போன்றவர்கள் சில மாதங்கள் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியதை பின்பற்றாத அவர் தொடர்ந்து விளையாடி ஃபார்முக்கு திரும்ப முடியும் என்ற தன் மீதான நம்பிக்கையால் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு விளையாடி வருகிறார். ஆனாலும் ஏதோ ஒரு வகையில் அதிர்ஷ்டம் அவருக்கு கை கொடுக்காமல் அவுட்டாக்கி விடுவதையும் அதற்காக அவர் வானத்தை நோக்கி புலம்புவதையும் பார்க்க முடிகிறது.

- Advertisement -

பாபர் ஆதரவு:
இந்நிலையில் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் அதிர்ஷ்டம் இன்மையால் மீண்டும் மீண்டும் அவுட்டாகி மேலும் அழுத்தத்திற்கு உள்ளாகும் விராட் கோலிக்கு பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் பாபர் அசாம் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டியில் 16 ரன்களுக்கு அவுட்டான பின் விராட் கோலியுடன் தாம் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவிட்டு “இதுவும் கடந்து போகும்” என்று அவர் ஆதரவு தெரிவித்துள்ளது இந்திய ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி நெஞ்சைத் தொட்டுள்ளது.

ஏனெனில் பார்மின்றி தவிக்கும் சமீப காலங்களில் அபாரமாக செயல்பட்டு வரும் பாபர் அசாம் விராட் கோலியின் நிறைய சாதனைகளை உடைத்து ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் அவரை முந்தி உலகின் நம்பர்-1 பேட்ஸ்மேனாக திகழ்கிறார். அதனால் விராட் கோலியை விட பாபர் அசாம் சிறந்தவர் என்று அந்நாட்டு வீரர்களும் ரசிகர்களும் தினம்தோறும் அழுத்தத்தில் தவிக்கும் விராட் கோலிக்கு மேலும் அழுத்தத்தை உண்டாக்குகிறார்கள்.

இதையும் படிங்க : IND vs ENG : இந்திய அணிக்கெதிரான போட்டியில் 25 ஆண்டுகால சாதனையை தகர்த்த – ரீஸ் டோப்லே

ஆனால் அவர்களைப் போல் அல்லாமல் மோசமான தருணத்தில் தவிக்கும் நண்பனுக்கு உத்வேகத்தை கொடுப்பதுபோல் நல்ல மனதுடன் ஆதரவு தெரிவித்துள்ள பாபர் அசாமுக்கு இந்திய ரசிகர்கள் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement