IND vs ENG : இந்திய அணிக்கெதிரான போட்டியில் 25 ஆண்டுகால சாதனையை தகர்த்த – ரீஸ் டோப்லே

Reece-Topley
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேளையில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 49 அவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Yuzvendra Chahal

- Advertisement -

அதனை தொடர்ந்து 247 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 38.5 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் தற்போது சமநிலை செய்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டோப்லே இந்திய அணிக்கு எதிராக நேற்றைய போட்டியில் 9.5 ஓவர்கள் வீசி 2 மெயின்டன் ஓவர்களை வீசியதோடு மட்டுமின்றி 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Reece Topley 1

இதன் காரணமாக நேற்று 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முக்கிய சாதனையை அவர் தகர்த்துள்ளார். அதன்படி 1997 ஆம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் டேரன் கோஃப் என்பவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதுதான் லார்ட்ஸ் மைதானத்தில் சிறந்த பந்துவீச்சாக இதுவரை இருந்து வந்தது.

- Advertisement -

இந்நிலையில் அவரது இந்த சாதனையை தற்போது 6 விக்கெட்டுகளுடன் ரீஸ் டோப்லே முறியடித்துள்ளார். அதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி சார்பாக சிறந்த பந்துவீச்சாக இதுவரை அந்த அணியின் முன்னாள் கேப்டனான காலிங்வுட்டின் பந்துவீச்சே இருந்து வந்தது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அவர் 31 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இதையும் படிங்க : விராட் கோலியின் கீழ் ஒருமுறை கூட இப்படி நடக்கல. ஆனா ரோஹித்தின் தலைமையில் நடந்த மோசமான சாதனை

தற்போது அவரை பின்னுக்கு தள்ளியுள்ள ரீஸ் டோப்லே 24 ரன்களுக்கு 6 விக்கெட்டை கைப்பற்றியதால் இங்கிலாந்து அணியின் சிறந்த பந்துவீச்சாக இதனை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரை தொடர்ந்து கிரிஸ் வோக்ஸ் இங்கிலாந்து அணிக்காக இரண்டு முறை 6 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

Advertisement