விராட் கோலியின் கீழ் ஒருமுறை கூட இப்படி நடக்கல. ஆனா ரோஹித்தின் தலைமையில் நடந்த மோசமான சாதனை

rohith
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டி ஜூலை 14-ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி காயத்திலிருந்து மீண்டு அணியில் இணைந்த நிலையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

Yuzvendra Chahal

- Advertisement -

அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து இம்முறை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தாலும் இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சில் 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 23 (33) ரன்களிலும் ஜானி பேர்ஸ்டோ 38 (38) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அடுத்ததாக களமிறங்கிய ஜோ ரூட் 11 (21) ரன்கள் கேப்டன் ஜோஸ் பட்லர் 4 (5) ரன்கள் பென் ஸ்டோக்ஸ் 21 (33) ரன்கள் என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி மேலும் பின்னடைவை கொடுத்தனர.

ஏமாற்றிய பேட்ஸ்மேன்கள்:
அதனால் 102/5 என திணறிய இங்கிலாந்து 200 ரன்களை தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட அதிரடி காட்ட முயன்ற லியம் லிவிங்ஸ்டனும் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 33 (33) ரன்களில் அவுட்டானார். அதன் காரணமாக பலத்த பின்னடைவை சந்தித்த இங்கிலாந்துக்கு 7-வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடிய மொய்ன் அலி மற்றும் டேவிட் வில்லி ஆகியோர் 62 ரன்கள் முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை ஓரளவு சரி செய்தனர். அதில் மொய்ன் அலி 47 (64) ரன்களிலும் டேவிட் வில்லி 41 (49) ரன்களிலும் அவுட்டாக கடைசியில் வந்த பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்டுகளும் பும்ரா மற்றும் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

IND vs ENG Reece Toply Virat Kohli

அதை தொடர்ந்து 247 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா 0, ஷிகர் தவான் 9 என 2 தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தனர். போதாக்குறைக்கு அடுத்ததாக ரிஷப் பண்ட் டக் அவுட்டாகி சென்ற நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி மீண்டும் 16 (25) ரன்களில் நடையை கட்டினார். அதனால் 31/4 என படுமோசமான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவை தூக்கி நிறுத்த முயன்ற சூர்யகுமார் யாதவ் 27 (29) ரன்களிலும் ஹர்திக் பாண்டியா 29 (44) ரன்களிலும் அவுட்டானதால் இந்தியாவின் தோல்வியும் உறுதியானது.

- Advertisement -

146க்கு ஆல்-அவுட்:
இறுதியில் வெற்றிக்காக போராடிய ரவீந்திர ஜடேஜா 29 (44) ரன்களிலும் முகமது சமி 23 (28) ரன்கள் எடுத்த போதிலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்மல் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 38.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இங்கிலாந்து முதல் போட்டியில் தங்களை 110 ரன்களுக்குள் சுருட்டி வரலாற்று தோல்வியை பரிசளித்த இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து தொடரை 1 – 1* (3) சமன் செய்துள்ளது.

Rohit and Dhawan

முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடந்த டெஸ்ட் போட்டியில் 378 ரன்களை சேசிங் செய்து அவமானத்தைச் சந்திக்க வைத்த இங்கிலாந்துக்கு கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதும் நடந்த டி20 தொடரில் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்று பழி தீர்த்தது. அந்த நிலைமையில் நடந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் மெகா வெற்றி பெற்ற இந்தியா இப்போட்டியில் பவுலர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்ட போதிலும் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் 150 ரன்களைக் கூட தாண்ட முடியாமல் படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ரோஹித் கேப்டன்ஷிப்பில்:
ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 8 வருடங்களில் இந்தியா இப்படி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாவது இது 3-வது முறையாகும். அதில் ஆச்சரியப்படும் வகையில் அந்த 3 போட்டிகளும் ரோகித் சர்மாவின் கீழ் நடைபெற்றதாகும். ஆம் கடந்த 2019 ஜனவரியில் நியூசிலாந்து மண்ணில் நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி ஓய்வெடுத்த 4-வது போட்டியில் தற்காலிக கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா தலைமையில் ஹமில்டன் நகரில் களமிறங்கிய இந்தியா வெறும் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 8 விக்கெட் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது.

Rohith-toss

அதற்கு முன்பாக கடந்த 2017இல் தரம்சாலாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தற்காலிக கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மாவின் கீழ் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தோனியின் 65 ரன்களால் தப்பினாலும் வெறும் 112 ரன்களுக்கு சுருண்டு பின்னர் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. தற்போது முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக 150 ரன்களை தாண்டாமல் அவுட்டாகியுள்ளது.

இதையும் படிங்க : விராட் கோலியை சரிவிலிருந்து மீட்க அவங்க 2 பேரால் மட்டும் தான் முடியும் – மான்டி பனேசர் யோசனை

2017 முதல் 2021 முழுநேர கேப்டனாக செயல்பட்ட விராட் கோலியின் தலைமையில் இதுபோல் ஒரு முறை கூட இந்தியா 150 ரன்களை தாண்டாமல் அவுட்டானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement