விராட் கோலியை சரிவிலிருந்து மீட்க அவங்க 2 பேரால் மட்டும் தான் முடியும் – மான்டி பனேசர் யோசனை

Monty-Panesar-and-Virat-Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான பகல் இரவு டெஸ்ட் போட்டியின் போது சதம் அடித்தார். அதன் பிறகு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக சதம் அடிக்காமல் தவித்து வரும் விராட் கோலி சமீபகாலமாகவே மிக மோசமான பார்மில் இருக்கிறார். குறிப்பாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் மூன்று முறை டக் அவுட் ஆன கோலி அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டிலும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருகிறார்.

kohli

- Advertisement -

ஒவ்வொரு தொடரிலும் தனது இழந்த பார்மை மீட்டெடுத்து விடுவார் என்று ரசிகர்களும், இந்திய அணியின் நிர்வாகமும் அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்தாலும் தற்போது வரை அவரால் அந்த சரிவிலிருந்து மீண்டுவர முடியவில்லை. மேலும் அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு டி20 போட்டிகளில் விளையாடிய கோலி முறையை 1 மற்றும் 11 ரன்கள் என சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் நேற்று விளையாடிய கோலி நேற்றைய போட்டியிலும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறியது அவர் மீதான விமர்சனத்தை தற்போது அதிகப்படுத்தியுள்ளது. இப்படி சமீப காலமாகவே ரன்களை குவிக்க திணறி வரும் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Sachin

அதோடு முன்னாள் வீரர்கள் பலரும் கோலிக்கு தற்போது ஓய்வு தேவை என்றும் அவருக்கு ஓய்வு வழங்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்றெல்லாம் பேச துவங்கி விட்டனர். இந்நிலையில் விராட் கோலியின் இந்த மோசமான ஃபார்ம் காரணமாக அவர் மீது ஒருபுறம் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு சிலர் அவருக்கு ஆதரவினை தெரிவித்து அவர் இந்த சரிவில் இருந்து மீண்டு வர என்ன வழி என்பது குறித்தும் பேசி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் விராட் கோலியின் மோசமான பார்ம் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மான்டி பனேசர் தற்போது விராட் கோலியின் மோசமான பார்ம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி இந்த சரிவிலிருந்து மீண்டு வர நிச்சயம் அவர் டெண்டுல்கரிடம் ஆலோசனை பெற வேண்டும். ஏனெனில் கோலி டெண்டுல்கரை மிகவும் மதிக்கிறார்.

இதையும் படிங்க : IND vs ENG : தோல்வியிலும் பந்துவீச்சில் அசத்திய சாஹல், 39 வருடங்களுக்கு பின் படைத்த தனித்துவமான சாதனை

அதனால் அவருடன் கலந்துரையாடினால் கோலிக்கு ஒரு தீர்வு கிடைக்கும். அதே போன்று யுவராஜ் சிங்கிடமும் கோலி பேச வேண்டும். அவர்கள் இருவரால் கோலிக்கு நிச்சயம் உதவ முடியும். கிரிக்கெட் விளையாட்டிற்கு வெளியே இருக்கும் இவர்களிடம் கோலி பேசினால் அவரது ஆட்டத்தில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்றும் மான்டி பனேசர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement