பாகிஸ்தானின் வெற்றியால் 4 ஆவது இடத்தில் ஏற்பட்டுள்ள கடும் போட்டி – அரையிறுதிக்கு தகுதிபெறப்போவது யார்?

PAK
- Advertisement -

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய ஐ.சி.சி-யின் 13-ஆவது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் முடிவடைய இருக்கும் இவ்வேளையில் அரையிறுதிக்கு தகுதி பெறப்போகும் நான்கு அணிகள் குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவி வருகிறது. இதில் ஏற்கனவே இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு அரையிறுதிக்கு அதிகாரபூர்வமாக தகுதிபெற்று விட்டனர்.

இவ்வேளையில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு தற்போது கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதில் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணி 7 போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன் 10 புள்ளிகள் எடுத்து முன்னிலையில் இருக்கும் வேளையில் நான்காவது இடத்திற்கான போட்டி தற்போது பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஏனெனில் நேற்று பெங்களூரு மைதானத்தில் நடைபெற்ற மிக முக்கியமான 35-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தற்போது நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் என இரண்டு அணிகளுமே 8 போட்டிகளில் நான்கு வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இரு அணிகளுக்குமே இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ளதால் அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நான்காவது இடத்திற்கு செல்ல ஒரு வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

அதேவேளையில் ஆப்கானிஸ்தான் அணி தற்போது ஏழு போட்டியிலே நான்கு வெற்றிகளை பெற்று 8 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தில் இருக்கும் வேளையில் அவர்களுக்கும் அரையிறுதிக்கு செல்ல ஒரு வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர்களுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளது. அந்த இரண்டில் ஒன்றில் பெரிய வெற்றி பெற்றால் கூட அவர்களாலும் அரையிறுதிக்கு செல்ல முடியும்.

இதையும் படிங்க : பாண்டியா இல்லைன்னு கவலைப்படாதீங்க.. 6வது பவுலரா அவர் ரெடியா இருக்காரு.. டிராவிட் வித்யாச பேட்டி

ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில் அவர்களே நான்காவது தகுதி அடைந்து அரையிறுதிக்கு செல்வார்கள். இப்படி நான்காவது இடத்திற்கான போட்டி கடுமையாக மாறியுள்ளதால் அரையிறுதிக்கு 4 ஆவது அணியாக செல்லப்போவது யார்? என்கிற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement