பாண்டியா இல்லைன்னு கவலைப்படாதீங்க.. 6வது பவுலரா அவர் ரெடியா இருக்காரு.. டிராவிட் வித்யாச பேட்டி

Rahul Dravid 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 7 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக 7 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஜொலித்து வரும் இந்தியா செமி ஃபைனலுக்கு முதல் அணியாகவும் தகுதி பெற்று சொந்த மண்ணில் கில்லியாக செயல்பட்டு வருவதால் 2011 போல கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் முக்கியமான நாக் அவுட் சுற்று நெருங்கியுள்ள இந்த சமயத்தில் நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா காயத்தால் வெளியேறியுள்ளது இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் சமநிலையை ஏற்படுத்தக்கூடிய அவர் உலக அளவில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக இருந்து வருகிறார்.

- Advertisement -

கவலை வேண்டாம்:
குறிப்பாக பேட்டிங்கில் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் ஃபினிஷராகவும் செயல்படும் திறமை கொண்ட அவர் பந்து வீச்சில் 6வது பவுலராக வெற்றிகளில் முக்கிய பங்காற்றக்கூடிய கருப்பு குதிரையாக பார்க்கப்படுகிறார். அப்படிப்பட்ட அவர் காயத்தால் வெளியேறியுள்ளதால் தற்போது இந்தியா 5 பவுலர்களுடன் மட்டுமே விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் 6வது பவுலராக விராட் கோலி செயல்படுவதற்கு தயாராக இருப்பதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார். குறிப்பாக பாண்டியா காயமடைந்து வெளியேறிய வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அவருடைய எஞ்சிய ஓவரை விராட் கோலி வீசி முடித்ததாக தெரிவிக்கும் டிராவிட் இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு. “ஆம் தற்போது எங்களிடம் தரமான 6வது பவுலர் இல்லை”

- Advertisement -

“ஆனால் எங்களிடம் தவறான காலடியில் உள்ள இன்ஸ்விங்கர் பந்துகளை வீசி அச்சுறுத்தலை கொடுக்கக் கூடியவர் இருக்கிறார். அவரை ஓரிரு ஓவர்களுக்கு நாங்கள் பயன்படுத்தலாம். கடந்த போட்டியில் கூட ரசிகர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு கேட்டுக் கொண்டதால் அவர் பந்து வீசுவதற்கு நெருக்கமாக இருந்தார். எனவே அணி மற்றும் வீரர்களின் பதில் சிறப்பாக உள்ளது” என்று கூறினார். மேலும் விராட் கோலி தம்முடைய சதத்தை பற்றி கவலைப்படவில்லை என்றும் தெரிவிக்கும் டிராவிட் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: அவங்கள தலைகுனிய வெச்சுட்டேன்.. என் கேரியரின் லோயஸ்ட் பாய்ண்ட்.. கேப்டன் பட்லர் வேதனை பேட்டி

“இந்தியாவுக்கு தொடர்ந்து வழக்கம் போல விளையாடுவதற்கு விராட் கோலி ரிலாக்ஸாக இருக்கிறார். குறிப்பாக தன்னுடைய பிறந்த நாளில் 49 அல்லது 50வது சதத்தை அடிப்பதற்காக விராட் கோலி எவ்விதமான கவலையுடன் இருப்பதாக எனக்கு தெரியவில்லை” என்று கூறினார் இதை தொடர்ந்து இந்தியா தங்களுடைய 5வது போட்டியில் நவம்பர் 5ஆம் தேதி கொல்கத்தாவில் வலுவான தென்னாபிரிக்காவை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement