PAK vs AFG : எங்க வந்து யார்கிட்ட? ஆப்கானிஸ்தானை செஞ்சிவிட்ட பாகிஸ்தான் – 37 வருட சரித்திர சாதனை வெற்றி

PAk vs AFG Haris Rauf Shaheen Afridi
- Advertisement -

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வரலாற்றிலேயே முதல் முறையாக மோதும் ஒரு இருதரப்பு கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 22ஆம் தேதி இலங்கையில் துவங்கியது. விரைவில் துவங்கும் 2023 ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் ஆரம்பம் முதலே தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 47.1 ஓவரில் வெறும் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Babar Rasid khan

- Advertisement -

கேப்டன் பாபர் அசாம் 0, பக்கார் ஜமான் முகமது ரிஸ்வான் 21, சல்மான் ஆஹா 7, இப்திகார் அகமது 30, சடாப் கான் 39 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 61 ரன்கள் எடுத்தார். மறுபுறம் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முஜீப் ஊர் ரஹ்மான் 3 விக்கெட்களையும் முகமது நபி மற்றும் ரசித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதனால் கத்துக்குட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானிடம் வலுவான பாகிஸ்தான் தோல்வியை சந்திக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

சரித்திர வெற்றி:
ஆனால் ஆப்கானிஸ்தான் தங்களின் பலமான சுழல் பந்து வீச்சை பயன்படுத்தியதைப் போல பாகிஸ்தான் தங்களுடைய தரமான வேகப்பந்து பந்து வீச்சை பயன்படுத்தி ஆரம்பத்திலிருந்தே மிரட்டலாக பந்து வீசியது. குறிப்பாக ஷாஹீன் அப்ரிடி வீசிய 3வது ஓவரில் இப்ராஹிம் ஜாட்ரான் 0, ரஹ்மத் ஷா 0 என 2 முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து டக் அவுட்டாக அடுத்ததாக வந்த கேப்டன் ஷாகிதியும் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் 4/3 என்ற மோசமான துவக்கத்தை பெற்ற ஆப்கானிஸ்தானுக்கு இக்ரம் கில் 4, முகமது நபி 7, ரகமதுல்லா குர்பாஸ் 18 என இதர முக்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

shaheen afridi

அப்படி ஆரம்பம் முதலே தடுமாறி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 19.2 ஓவரில் வெறும் 59 ரன்களுக்கு சுருண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் தங்களுடைய 2வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து பரிதாப சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 2016இல் சார்ஜாவில் நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் 58 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே ஆப்கானிஸ்தானின் முதல் குறைந்தபட்ச ஒருநாள் ஸ்கோராக இருக்கிறது.

- Advertisement -

அதன் காரணமாக 142 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பாகிஸ்தான் எங்க வந்து யார்கிட்ட என்பது போல் தங்களுடைய 2வது பரம எதிரியான ஆப்கானிஸ்தானை தெறிக்க விட்டு மெகா வெற்றியை பதிவு செய்து 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அந்தளவுக்கு மிரட்டலாக பந்து வீசிய அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 5 விக்கெட்களையும் ஷாஹின் அப்ரிடி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

AFGvsPAK

அதை விட இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு எதிரணியை மிகவும் குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆல் அவுட்டாக்கி பாகிஸ்தான் சரித்திர வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன் கடந்த 1986ஆம் ஆண்டு நியூசிலாந்தை வெறும் 64 ரன்களுக்கு சுருட்டி வெற்றி கண்ட பாகிஸ்தான் தற்போது 37 வருடங்கள் கழித்து அதை விட குறைவாக ஆப்கானிஸ்தானை வெறும் 59 ரன்களுக்கு சுருட்டி வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 5 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஹாரிஸ் ரவூப் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையும் படிங்க:இந்த வருஷம் 50 ஓவர் உலகக்கோப்பையை ஜெயிக்கப்போகும் டீம்னா அது இவங்க தான் – இயான் மோர்கன் கணிப்பு

இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி ஆகஸ்ட் 24ஆம் தேதி ஹம்பன்தோட்டாவில் நடைபெற உள்ளது. அதில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ள ஆப்கானிஸ்தான் தொடரை வெல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ளது. மறுபுறம் வலுவான அணியாக திகழும் பாகிஸ்தான் இதே போல வெற்றி பெற்று கோப்பையை வெல்வதற்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement