இந்த வருஷம் 50 ஓவர் உலகக்கோப்பையை ஜெயிக்கப்போகும் டீம்னா அது இவங்க தான் – இயான் மோர்கன் கணிப்பு

Eoin-Morgan
- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இதற்காக தற்போது அனைத்து அணிகளும் தீவிரமாக தங்களது அணியின் வீரர்களை தேர்வு செய்து வரும் வேளையில் இந்திய அணியும் மும்முரமாக இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணித்தேர்வில் ஈடுபட்டு வருகிறது. ஏனெனில் கடந்து 2013-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் கைப்பற்றாததால் இம்முறை சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே அனைவருமே எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Worldcup

- Advertisement -

எனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்து வருகிறது. அந்த வகையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை நேற்று முன்தினம் அறிவித்த வேளையில் அந்த அணியில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான வீரர்களே உலகக்கோப்பை அணியிலும் விளையாடுவார்கள் என்பதன் காரணமாக தற்போது அந்த அணித்தேர்வின் மீதான கருத்துக்கள் குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஏற்கனவே இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை குறித்து பலரும் பேசிவரும் வேளையில் இந்த முறை எந்த அணி வெற்றி பெறும்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், 2019 சாம்பியன் பட்டத்தை வென்ற கேப்டனுமான இயான் மோர்கன் இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 உலகக் கோப்பை தொடரில் எந்த அணி வெற்றி பெறும்? என்பது குறித்த தனது கருத்தினை அளித்துள்ளார்.

Rohit Kuldeep Yadav Virat Kohli KL Rahul India

இது குறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து அணி ஒரு நல்ல அணிதான் இருந்தாலும் என்னை பொறுத்தவரை இந்தியாவிற்கு அடுத்துதான் இங்கிலாந்து அணியை நான் குறிப்பிட விரும்புகிறேன். ஏனெனில் 2011-ஆம் ஆண்டு இந்திய மண்ணில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதேபோன்று 2015-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற்றது. அதேபோன்று 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

எனவே 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் உலககோப்பை தொடர் நடைபெற உள்ளதால் இந்திய அணியே கோப்பையை வெல்ல அதிகமாக உள்ளதாக நான் கருதுகிறேன். அதேபோன்று இந்திய அணிக்கு அடுத்து இங்கிலாந்து அணி இந்த கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. அதோடு இந்த தொடரில் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் நான்கு அணிகளை நான் குறிப்பிட வேண்டுமென்றால் :

இதையும் படிங்க : நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும்? நியாயம் யார் பக்கம் இருக்குன்னு பாருங்க – ஹர்மன்ப்ரீத் கௌர் அதிரடி பேட்டி

இந்தியா இங்கிலாந்து அணியுடன் சேர்த்து ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்று கூறுவேன் என இயான் மோர்கன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement